Skip to main content

இன்பமும் துன்பமும் - Kahlil Gibran...On Joy & Sorrow


இன்பத்தையும் துன்பத்தையும் பற்றிச் சொல்” என்று ஒரு பெண் கேட்டாள்.

அவன் சொல்லத் தொடங்கினான்.

உங்கள் மகிழ்ச்சி என்பது துன்பம் மறைக்கப்பட்ட நிலை தான்.

எந்தக் கிணற்றிலிருந்து உங்கள் மகிழ்ச்சி பொங்கி வழிகிறதோ அந்தக் கிணறு உங்கள் கண்ணீரால் தான் நிரம்பியுள்ளது.

அது அப்படி இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்?

எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் துன்பம் ஆழமானதோ அவ்வளவுக்கவ்வளவு அது மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறது.

உங்கள் கையில் உள்ள பழரசக் கிண்ணம் குயவனின் நெருப்பின் தகிப்பில் தானே பிறந்தது?

உங்கள் உயிரை இசையால் வருடும் மூங்கில் குழல் கூரிய கத்தியின் கீறல்களில் தானே பிறந்தது?

நீங்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் போது உங்கள் இதயத்தை ஊன்றிப் பாருங்கள்; மகிழ்ச்சியை அளித்த அது தான் துன்பத்தையும் தந்தது உங்களுக்குப் புரியவரும்.

துன்பத்திலும் மீண்டும் உங்கள் இதயத்தை ஊன்றிப் பாருங்கள்; மகிழ்ச்சியில் திளைத்த கணங்களுக்காகத் தான் இந்தத் துன்பம் என்ற உண்மை புரியவரும்.

உங்களில் சிலர்  " துன்பத்தை விட இன்பம் தான் பெரியது " என்று கூறுகிறார்கள்.

மற்றவர்கள்  "இல்லை  இல்லை இன்பத்தை  விட  துன்பம் தான் பெரியது" என்று கூறுகிறார்கள்.

 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவை பிரிக்க முடியாதவை.

அவை சேர்ந்தே வருகின்றன.

நினைவிலிருக்கட்டும். ஒன்றோடு நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றது உங்கள் உள்அறையில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் இன்பம் துன்பம் என்ற தட்டுக்களோடு தொங்கவிடப்பட்ட தராசு தான் நீங்கள்.

ஒன்றுமில்லாத போது தான் சமநிலை சாத்தியம்.

படைத்தானே அவன் தன் பொன்னையும் வெள்ளியையும் எடைபோட தராசுக் கல்லாக உங்களைத் தூக்கும்போது உங்கள் இன்ப துன்பங்கள் கூட்டப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன.

On Joy & Sorrow

Then a woman said, "Speak to us of Joy and Sorrow."

And he answered:

Your joy is your sorrow unmasked.

And the selfsame well from which your laughter rises was oftentimes filled with your tears.

And how else can it be?

The deeper that sorrow carves into your being, the more joy you can contain.

Is not the cup that hold your wine the very cup that was burned in the potter's oven?

And is not the lute that soothes your spirit, the very wood that was hollowed with knives?

When you are joyous, look deep into your heart and you shall find it is only that which has given you sorrow that is giving you joy.

When you are sorrowful look again in your heart, and you shall see that in truth you are weeping for that which has been your delight.

Some of you say, "Joy is greater than sorrow," and others say, "Nay, sorrow is the greater."

 But I say unto you, they are inseparable.

Together they come, and when one sits alone with you at your board, remember that the other is asleep upon your bed.

 Verily you are suspended like scales between your sorrow and your joy.

Only when you are empty are you at standstill and balanced.

When the treasure-keeper lifts you to weigh his gold and his silver, needs must your joy or your sorrow rise or fall.

(Kahlil Gibran   in  The Prophet)

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...