பெயரெச்சம்
ஓடிய குதிரை என்ற சொல்லில்,
குதிரை என்பது ஒரு பெயர்ச்சொல்
ஓடிய என்பது ஒரு முற்றுப் பெறாத வினைச்சொல்.
எனவே ஓடிய குதிரை என்பது ஒரு பெயரெச்சமாகும்.
படித்த பெண் என்ற சொல்லில்,
பெண் என்பது ஒரு பெயர்ச்சொல்
படித்த என்பது ஒரு முற்றுப் பெறாத வினைச்சொல்.
எனவே படித்த பெண் என்பது ஒரு பெயரெச்சமாகும்.
முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
முற்றுப்பெறாத எச்ச வினைகள் பெயரைக்கொண்டு முடிந்தால் அவை பெயரெச்சம் எனப்படும்.
முதல் சொல்லின் இறுதி எழுத்தாக அ, உம் இவற்றில் ஒன்றைப் பெற்று வரும்.
பெயரெச்சம் கால வகையில் மூன்று வகைப்படும்.
1.
இறந்தகால பெயரெச்சம் - படித்த மாணவன்
2.
நிகழ்கால பெயரெச்சம் - படிக்கின்ற மாணவன்
3.
எதிர்கால பெயரெச்சம் - படிக்கும் மாணவன்
எ.கா
உண்ட மாணவி, உண்ணும் வேளை, உண்கின்ற பொருள், தீர்ந்த பொருள்
தெரிநிலைப் பெயரெச்சம்
செய்த, செய்கின்ற, செய்யும் எனும் பெயரெச்ச வாய்ப்பாடுகள் முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாககக் காட்டி பால் காட்டும் விகுதியுடன் செய்பவன் முதலிய ஆறும் எஞ்சி
நிற்கும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும்.
இவை உடன்பாட்டிலும் எதிர் மறையிலும் வரும்.
எ.கா
உண்ட மாணவி, உண்கின்ற மாணவி, உண்ணாத மாணவி
செய்பவர் - மாணவி
கருவி – கலம்
நிலம் - வீடு
செயல் – உண்ணுதல்
காலம் - இறந்த காலம்
செய்பொருள் – சோறு
Comments
Post a Comment
Your feedback