தன்னைத் தானே புகழ்ந்துரைத்துக்கொண்டு ஒருவனோ ஒருத்தியோ பாடுகின்ற பாட்டில் அமைந்துள்ள அணி தன்மேம்பாட்டுரை அணி எனப்படும்.
இதை,
'தான் தற்புகழ்வது தன் மேம்பாட்டுரை'
என்று கூறுகிறது தண்டியலங்காரம்.
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே.
(கண்ணதாசன்)
என்ற பாடலில் தன்னைத் தானே புகழ்ச்சியாகப் பாடிக் கொள்வதால் இந்தப் பாடலில் தன்மேம்பாட்டுரை அணி அமைந்துள்ளது.
உலகம் என் புகழைப் பாடட்டுமே
உயர்ந்தவன் நான் என்று சொல்லட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
நான் இருக்கும் இடத்தில் நாடு இருக்கும்
நான் என்னும் சொல்லே நடமாடும்
(கண்ணதாசன்)
இந்த வரிகளையும் கவனித்துப் பாருங்கள்.
இதில் அமைந்துள்ளதும் தன்மேம்பாட்டுரை அணி தான்.
Comments
Post a Comment
Your feedback