தேங்கிக் கெட்டது
நிலம்
தேங்காமல் கெட்டது
குளம்
செடிகள்
அழுகிவிடும்.
நெல்லுக்கு நீர்
தேங்கி இருக்கலாம். மற்ற பயிர்களுக்கு
மூன்று நாட்களுக்கு
ஒருமுறை அல்லது
ஆறுநாட்களுக்கு ஒருமுறை என்று முறை
வைத்துத்
தண்ணீர்
பாய்ச்சுவது நீர் தேங்காமல் பார்த்துக்
கொள்வதற்குத் தான்.
ஒருவாரம் தொடர்ந்து
மழை பெய்தால் போதும் பாதிப்பயிர்கள்
அழுகிவிடுகிறது.
இது எதனால்
நிகழ்கிறது?
வேருக்கடியில்
தொடர்ந்து நீர் தேங்கி இருப்பதால்தான்
வேர்கள் அழுகி விடுகின்றன.
ஆனால் குளம் அப்படி
இல்லை.
குளத்தில் எப்போதும் நீர் தேங்கி இருக்க வேண்டும்.
அப்போதுதான்
குளத்தைச் சுற்றி உள்ள இடங்கள் தணுப்பாக
இருக்கும்.
மரங்கள் வளரும்.
தண்ணீர் இல்லாக் குளம் மானாவாரிக் காடு போல கருவேல மரங்கள் வளர்ந்து தன் பொலிவை இழந்து விடும்.
அதனால்தான், தேங்கிக் கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம் என்று
சொல்வார்கள்.
குளத்திலே தண்ணியில்லே
கொக்குமில்லே மீனுமில்லே
(கண்ணதாசன்)
இதேபோன்று
ReplyDelete"மழைக்கும்"
ஒரு அடைமொழியை குறிப்பிடுவார்கள் ..
பெய்து கெடுக்கும்...
பெய்யாமல் கெடுக்கும்..!!