ஒரே ஒரு பொருளுக்கு ஒரே ஒரு உருவகம் அமைத்தல் உத்திகளில் ஒன்று.
இதனைத் தனிநிலை உருவகம் (Simple metophor) எனக் கூறலாம்.
அது இயற்கை தொடர்பானதாக இருக்கின்ற பொழுது அந்த உருவகம் இயற்கைத் தனிநிலை உருவகம் என்று வழங்கப்படும்.
நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே
தொட்டில் கட்டும் மென்மை இது!
(கண்ணதாசன்)
இயற்கையாக அமைந்த நாணல் முன்னும் பின்னும் காற்றில் அசைவது நடந்து வருகின்ற ஒரு பெண்ணின் கால்களுக்கு உருவகம் ஆகிறது.
அந்தப் பெண்ணின் நாணம் தென்றலாக உருவகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றாக உருவகம் செய்து அவை யாவும் இயற்கை தொடர்பானதாகவே இருப்பதால் இது இயற்கைத் தனிநிலை உருவகம் ஆகிறது.
Comments
Post a Comment
Your feedback