ஒரு பொருளின் தன்மையைக் குறிப்பது பண்பு. இது நிறம், வடிவம், அளவு, சுவை,குணம் போன்ற பல தன்மைகள் குறித்து வரலாம்.
மையீற்றுப் பண்புத் தொகை
செழும்பயிர் என்பதை
செழுமை+பயிர் என எழுதலாம்.
செழுமையான பயிர் என்பது பொருள்.
மை என்ற ஈறு மறைந்திருப்பதால்
இது மையீற்றுப் பண்புப் தொகை.
அருந்தமிழ், நறுமலர், இளங்கதிர் போன்றவையும் மையீற்றுப்
பண்புத்தொகைகள்.
பொதுப் பண்பு தொகை
சிவப்புச் சேலை என்பதை
சிவப்பு+சேலை எனப் பிரிக்கலாம். இது வண்ணம் குறித்த பண்புத்தொகை.
ஆன ஆகிய
போன்ற சொற்கள் மறைந்து வந்து பொருள் தரும்.
சிவப்பான
சேலை என்பது பொருள். இதில் மையீறு வராது.
வட்டக் கல், காரத் துவையல் என்பதெல்லாம் பொதுப்பண்பு தொகைகள்.
Thendirai ku enna sir varum
ReplyDeleteதெண்டிரை – பண்புத்தொகை
Delete