வலியவரோடு சேர்ந்திருந்தால் வலிமை குறைந்தவர்கள்கூட வலிமை
உடையவரைக் கண்டு அஞ்ச மாட்டார்களாம்.
சிவபெருமானின் தலையில் இருக்கும் பாம்புக்கு கருடனைப் பார்த்து அச்சம் ஏற்படாமல் போயிற்றாம். காரணம் பாம்பு இருக்கும் இடம் அப்படி ஒரு வலிமையான இடம்.
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தான் மருவில் _ பலிஏர்
கடவுள் அவிசடைமேல் கட்செவி
அஞ்சாதே
படர்நிறைப் புள்அரசைப் பார்த்து.
(நன்னெறி- சிவப்பிரகாசர்)
கட்செவி என்பது பாம்பு.
புள் அரசு என்பது கருடன்.
இதே கருத்து கண்ணதாசனின் இந்தப் பாடலில்…
பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது...
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம்
இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
Comments
Post a Comment
Your feedback