வினைத்தொகை
மூன்று
காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை
ஆகும்.
(எ.கா) ஊறுகாய்
வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும்.முதல் சொல்லானது
வினைச்சொல்லாக இருக்கும்.இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.
ஊறுகாய்
என்பதில் ஊறு என்பது வினைச்சொல். காய் என்பது பெயர்ச்சொல்..
இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.
ஊறிய காய்-இறந்த காலம்
ஊறுகின்ற
காய்-நிகழ்காலம்
ஊறும்
காய்-எதிர்காலம்
Comments
Post a Comment
Your feedback