முன்பெல்லாம் ஒருவர் மட்டும் படித்திருந்து, கூட இருக்கும் இரண்டு மூன்று பேர் படிக்கத் தெரியாதவராக இருந்தால் படிக்கத் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாட்டுப் புத்தகத்தையோ செய்தித்தாளையோ உரக்கப் படிப்பது வழக்கம்.
இப்படி உரக்கப் படிக்கும்போது கேட்போர் தங்களுடைய அனுபவங்களையும் தாங்கள் வைத்திருக்கின்ற கதைகளையும் இடையிடையே கூறிப் புளகாங்கிதமடைந்து ஒரு கலந்துரையாடல் போலச் செய்து கொண்டு வருவார்கள்.
தெருக்கூத்து நிகழ்ச்சிகள் போல கூட்டு வாசிப்பு என்பது அடித்தள மக்களுக்கு விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருந்தது.
கூட்டு வாசிப்பு நிகழ்வு ஒன்றை புதுமைப்பித்தன் 'நாசகார கும்பலில்' பின்வருமாறு சித்தரிக்கிறார்.
நேரம் நல்ல உச்சிவெயில்...
பலசரக்கு கடைச் சுப்புப்பிள்ளை பட்டறையில் உட்கார்ந்து சுடலை மாடன் வில்லுப்பாட்டு புத்தகம் ஒன்றை ரஸமாக உரக்கப் பாடி, கடை சாய்ப்பின் கீழ் துண்டை விரித்து முழங்காலைக் கட்டி உட்கார்ந்திருக்கும் இரண்டொரு தேவமாரை (மறவர்) மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.
தம்பலத்தால் வாயில் எச்சில் ஊற்று நிறைய நிறைய, வாசிப்புக்கு இடையூறு ஏற்படாத படியும் கீழே உட்கார்ந்து இருப்பவர் மீது சிறிதும் தெறிக்காத படியும் லாவகமாக தலையை வெளியே நீட்டி அவர் துப்பும் போது கடையின் பக்கத்துச் சுவரில் துப்பாமல் இருப்பதற்கு நீண்ட நாள் அனுபவம் மட்டும் போதாது அதற்கு தனித் திறமையும் வேண்டும் என்பது தெரியும்.
Comments
Post a Comment
Your feedback