ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒரு வினைச்சொல் அதன் கடைசி எழுத்து இல்லாமல் வந்து அதனை அடுத்து வரும் பெயர்ச் சொல்லுக்கு விளக்கம் தருவதாக இருந்தால் அது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
செல்லாக்காசு
இதில் காசு என்பது பெயர்ச்சொல்.
செல்லாத என்ற வினைச்சொல் கடைசி எழுத்து இல்லாமல் அதாவது ஈற்றெழுத்து கெட்டு செல்லா என வந்துள்ளது.
இப்போது செல்லாக் காசு என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
அழியாப் புகழ்
இதில் புகழ் என்பது பெயர்ச்சொல்.
அழியாத என்ற வினைச்சொல் கடைசி எழுத்து இல்லாமல் அதாவது ஈற்றெழுத்து கெட்டு அழியா என வந்துள்ளது.
இப்போது அழியாப் புகழ் என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும் க,ச ,த ,ப மிகும்.
12ஆம் வகுப்புப் பாடப் பகுதியில் வரும் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பொய்யா, அடையா, மறையா, அறியா
11ஆம் வகுப்புப் பாடப் பகுதியில் வரும் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
முயலா , பிழையா, ஒடியா,ஆசிலா, ஓவா.
10ஆம் வகுப்புப் பாடப் பகுதியில் வரும் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வாரா
Comments
Post a Comment
Your feedback