குளத்திலே தாமரை பூத்திருக்கிறது.தாமரையின் பூந்தாதுக்களில் ஆடித்திளைத்தது ஓர் ஆண் நண்டு.
ஆடி முடித்துவிட்டு அதன் வளைக்குப் போகிற வழியில் பக்கத்திலிருந்த வேறொரு வளைக்குள் எட்டிப் பார்த்தது.
அதைப் பார்த்து விட்ட அதன் பெண் நண்டு சேற்றை உருண்டையாக்கி வளையின் கதவை அடைத்து ஆண் நண்டை வெளியே காத்திருக்குமாறு செய்துவிட்டது.
அவன் ஊர் நண்டும் கூட அப்படித் தான். அவனுக்கும் பொய் பேசினால் பிடிக்காது.
தடமண்டு தாமரையின்
தாது ஆடு அலவன்
இடம் அண்டிச்
செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு
பூழிக் கதவடைக்கும்
புத்தூரே பொய்கடிந்து
ஊழி நடாயினன் ஊர்.
அலவன் - நண்டு
Comments
Post a Comment
Your feedback