Skip to main content

குழந்தைகள் Kahlil Gibran ...On Children

கைக்குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு இருந்த தாய் ஒருத்தி கேட்டாள்  "எங்களுக்கு குழந்தைகளைப் பற்றிக் கூறு".


அவன் சொல்லத் தொடங்கினான்.


உங்கள் குழந்தைகள் உண்மையில் உங்களுடையவை அல்ல.


வாழ்வின் தாகத்தால் தோன்றிய மகனோ மகளோ தான் அவர்கள்.


அவர்கள் உங்களின் வழியில் தான்

 வருகிறார்கள்; உங்களிடமிருந்து அல்ல.


உங்களோடு இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்லர்.


உங்களின் அன்பை அவர்களுக்கு கொடுக்கலாம்; ஆனால் உங்களின் எண்ணங்களை அவர்களின் மேல் திணித்து விடாதீர்கள்.


ஏனென்றால் அவர்களுக்கு என்று தனியாக சிந்தனைகள் உண்டு.


குழந்தைகளின் உடல்நலத்தை நீங்கள் பாதுகாக்கலாம். ஆனால் அவர்களின் ஆன்மாவை  அல்ல.

ஏனென்றால் அவர்களின் ஆன்மா எதிர்காலத்தில் வாசம் செய்கிறது.


அவர்களின் வருங்காலத்தை கற்பனையில் காணவோ  அவர்களின் கனவுகளுக்குள் காலடி எடுத்து வைக்கவோ உங்களால் முடியாது.


அவர்களைப் போல் நீங்கள் இருக்க முயற்சிக்கலாம்.

 ஆனால் உங்களைப் போலவே அவர்களை ஆக்கிவிட முயலாதீர்கள்.


ஏனென்றால் வாழ்வு என்றும் பின்னோக்கிப் பாய்வதில்லையே.  

அது இறந்த காலத்தோடு இருந்து விடுவதுமில்லை.


பாயக் காத்திருக்கும் அம்புகள்  குழந்தைகள்.


அம்பைக் குறி பார்க்கும் ஆண்டவன் கைகளின்  வில் தான் நீங்கள்.


அம்புக்காக வளைந்து கொடுப்பதில் வில்  என்றும் மகிழ்ந்திருக்கட்டும்.


பாய்ந்து செல்கின்ற  அம்பின் மீது மட்டுமல்ல,  கைகளில் தங்கி விடுகின்ற வில்லின் மீதும் ஆண்டவனுக்கு அன்பு உண்டு.


On Children

And a woman who held a babe against her bosom said, "Speak to us of Children."

 And he said:

 Your children are not your children.

They are the sons and daughters of Life's longing for itself.

 They come through you but not from you, And though they are with you, yet they belong not to you.

 You may give them your love but not your thoughts.

For they have their own thoughts.

You may house their bodies but not their souls, For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams.

You may strive to be like them, but seek not to make them like you.

For life goes not backward nor tarries with yesterday.

 You are the bows from which your children as living arrows are sent forth.

The archer sees the mark upon the path of the infinite, and He bends you with His might that His arrows may go swift and far.

Let your bending in the archer's hand be for gladness;

 For even as he loves the arrow that flies, so He loves also the bow that is stable.

(Kahlil Gibran)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...