Skip to main content

Posts

Showing posts from October, 2025

அக்டோபர் 31

  அக்டோபர் 31 : 1875 சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்.  அக்டோபர் 31 : 1902 பசிபிக் பெருங்கடலின் குறுக்காக முதல் தந்திக் கம்பி அமைக்கப்பட்டது. அக்டோபர் 31 : 1931 தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ சென்னையில் திரையிடப்பட்டது.  இதே படம் தெலுங்கிலும் முதல் பேசும் படமாகும்.  ஏனெனில் படத்தின் கதாநாயகி பேசுவது பாடுவதெல்லாம் தமிழில் கதாநாயகனோ தெலுங்கில் பேசிப் பாடுவான். அக்டோபர் 31 : 1962 இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால் பலத்த கண்டனத்திற்குள்ளான பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கே. மேனன் பதவி விலகினார். அக்டோபர் 31 : 1984 இந்திரா காந்தி தன் மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்டோபர் 31 : 1984 இளம் வயது இந்தியப் பிரதமராக இந்திராவின் மகன் ராஜிவ் 40 வயதில் பதவியேற்றார். அக்டோபர் 31 : 1986 தமிழ்நாடு மேல் சபை ஒழிக்கப்பட்டது. அக்டோபர் 31 : 1990 புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல். வசந்தகுமாரி காலமானார். அக்டோபர் 31 : 1992 ‘பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது’ என்று வலியுறுத்தியதால் சர்ச் நிர்வ...

அக்டோபர் 30

 அக்டோபர் 30 : 1883 குழந்தைத் திருமணத்தை எதிர்த்தவரும் விதவை மறுமணத்தை ஆதரித்தவருமான சுவாமி தயானந்த சரஸ்வதி ஆஜ்மீரில் மறைந்தார்.  வி ஷம் கலந்த பாலை தனக்குக் கொடுத்த சமையல்காரனை மன்னித்து, அவன் நேபாளத்துக்குத் தப்பிச் செல்லப் பணமும் கொடுத்தனுப்பியவர் இவர். அக்டோபர் 30 : 1909 இந்திய அணுசக்தியின் தந்தை என்று போற்றப்படும் ஹோமி  பாபா (Homi Jehangir Bhabha)  பிறந்த நாள்.  ஜனவரி  24, 1966  இவர் மறைந்த நாள். அக்டோபர்  30  :  1916   தமிழ் இலக்கிய உலகில் லா.ச.ரா என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் பிறந்த நாள். லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பது தான் ல.ச.ரா என்பதன் முழு விரிவாக்கம்.  தமிழில் நனவோடை உத்தி என்ற இலக்கிய வகையை அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர்.  200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். அக்டோபர் 30,  2007  அன்று தனது தொண்ணூற்று இரண்டாவது பிறந்த நாள் அன்றே மறைந்தார்.  அக்டோபர்  30 :  2007    லா.ச...

அக்டோபர் 29

  அக்டோபர் 29 : 1863 செஞ்சிலுவைச் சங்கம் ஸ்விட்சர்லாந்தில் ஹென்றி டூனன்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.  29 அக்டோபர் 1909  தமிழறிஞர் மு. அருணாசலம் பிறந்த நாள்.  கணக்குப் பாடத்தில் பட்டம் பெற்றவராயினும், உ.வே.சா, ச.வையாபுரிப்பிள்ளை ஆகிய தமிழறிஞர்களோடு நெருங்கிப் பழகியதால் தமிழ் மேல் ஆர்வம் வந்தது இவருக்கு.  அதனால் முறையாக தமிழ் படித்து எம்.ஏ. பட்டம் பெற்று  தமிழாராய்ச்சியில் ஈடுபட்டு  ஆய்வு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார்.  தமிழ்மொழி,தமிழ்இசை இரண்டிலும் ஆழமான அறிவு கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய வரலாற்றை  நூற்றாண்டு வாரியாகத் தொகுத்து எழுதி வெளியிட்டார்.  தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.  23 நவம்பர் 1992 இவர் மறைந்த நாள்.  அக்டோபர் 29 : 1911 புலிட்ஸர் பரிசை நிறுவிய ஜோஸப் புலிட்ஸர் அமெரிக்காவில் காலமானார். அக்டோபர் 29 : 1920 கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் இவற்றில் பங்கு பெற அலிகாரில் ‘ஜாமியாமில்லியா இஸ்லாமியா’ ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர்  29: 1931  கவிஞர் வ...

அக்டோபர் 28

 அக்டோபர் 28 : 1627 ஜஹாங்கீர் ஆக்ரா திரும்பும் வழியில் லாகூர் அருகே கோமா நிலையை அடைந்து மரணமடைந்தார். அக்டோபர் 28 : 1636 அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகமாக  ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஜான் ஹார்வார்டில் முயற்சியால் அமைக்கப்பட்டது. அக்டோபர் 28 : 1831 மைக்கேல் பாரடே டைனமோ வேலை செய்வதை செயல் விளக்கம் செய்து காட்டினார். அக்டோபர் 28 , 1867 சுவாமி விவேகானந்தரின் முதன்மைச் சீடரான சகோதரி நிவேதிதா பிறந்த நாள்.   இவர் ஒரு ஆங்கில-ஐரிஷ் பெண். மார்கரெட் எலிசபெத் நோபல் என்பது இவரின் இயற்பெயர். விவேகானந்தரின் போதனைகளால் தன்னை அவரது சீடராக்கிக் கொள்ளவிரும்பி 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்தார்.  அதன் தொடர்ச்சியாக 1898ஆம் ஆண்டு ஜனவரி  28இல் இந்தியாவுக்கு வந்தார்.  நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே கல்கத்தா துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சை கொடுக்கும்போது விவேகானந்தர் அவருக்கு நிவேதிதா என்ற பெயரைச் சூட்டினார். நிவேதிதா என்றால் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு என்பது பொருள்.   ஒரு மேற்கத்தியப்...

அக்டோபர் 26

 அக்டோபர் 26 : 1861 ஃபிறாங்க் பர்ட்டில் உலகின் முதல் தொலைபேசி இன்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.   90 மீட்டர் தூரத்தில் ஒரு பாடல் பாட, அது வேறொரு அறையில் கேட்பது உறுதி செய்யப்பட்டது. அக்டோபர் 26 : 1947 இந்தியாவுடன் கா ஷ்மீர் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 26 : 1969 நிலவில் காலடி வைத்த முதல் விண்வெளி வீரர்களான நீல்  ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் பம்பாய் வந்தனர். அக்டோபர் 26 : 1985 அமெரிக்காவில் ஒரு குழந்தைக்கு இருதயம் சரிவர இயங்காததால் பபூண் குரங்கின் இருதயம் பொருத்தப்பட்டது. அக்டோபர் 26 : 1990 இந்தியத் திரைப்பட உலகின் தந்தை என்று போற்றப்படும் வி.சாந்தாராம் காலமானார்.

அக்டோபர் 25

அக்டோபர் 25, 1811  பரிதாபத்துக்குரிய கணித மேதை என்று நினைவு கொள்ளப்படும் கணித மேதை எவாரிஸ்ட்  கலாய்ஸ் பிரான்ஸ்  நாட்டின் பாரிசில் இன்று பிறந்தார்.  அவர் ஏன் பரிதாபத்துக்குரியவர் என்று கருதப்படுகிறார்?  அவரைப் பற்றிய சில விபரங்கள் இந்த லிங்க்-கில்   எவாரிஸ்ட் கலாய்ஸ் அக்டோபர் 25 : 1881 ஓவியம் என்றாலே பிக்காஸோ என்று நினைவுக்கு வரும் வகையில் சாதனை புரிந்த ஓவியர் பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) பிறந்த நாள்.  இருபரிமாண (Two Dimension) ஓவியங்கள் மட்டுமே ஓவியம் என்று நினைத்துக்கொண்டிருந்த காலத்தில் அதை மாற்றியவர்கள் இரண்டு பேர். மைக்கேல் ஏஞ்செலாவும், லியொனார்டோ டாவின்சியும் தான் அவர்கள். அவர்கள் தான் முப்பரிணாம ஓவியங்களை ஓவியத்துறைக்கு அறிமுகப்படுத்தினர்.  அவர்கள் மறைந்த பிறகு பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய பரிணாமத்தைத் தர முடியவில்லை.   அதன் பின் பிக்காஸோ  'கியூபிசம்' (cubism) என்ற புதிய ஓவிய பாணியை அறிமுகப்படுத்தினார். அதனால் தான் அவர்  'நவீன ஓவியங்களின் பிரம்மா' என்ற புகழைப் பெற்றார் . அக்டோபர...

அக்டோபர் 24

  அக்டோபர் 24 : 1605 அக்பரின் மகன் சலிம், ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் டில்லி அரியணையில் அமர்ந்தான். அக்டோபர் 24 : 1801 வெள்ளை மருது, சின்ன மருது, செவத்த தம்பி, அவன் மகன் முத்துச்சாமி, முத்துக்கருப்புத் தேவர் மற்றும் பல புரட்சியாளர்கள் திருப்பத்தூர் பழையகோட்டையில் தூக்கிலிடப்பட்டனர். அக்டோபர் 24 : 1863 பங்கு பத்திரங்களை மாற்றிக் கொடுக்கப் பயன்படும் தபால்தலை இந்தியாவில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.  சுங்கத் துறைக்கான தபால் தலையும் இன்றே  வெளியிடப்பட்டது. அக்டோபர் 24 : 1909 லண்டன் இந்திய ஹவுசில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.  இந்திய தூதுக்குழுத் தலைவராக வந்த காந்தி அதில் கலந்து கொண்டார். அக்டோபர் 24 : 1914  நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் லட்சுமி பிறந்த நாள். அக்டோபர் 24 : 1921 பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமண் பிறந்த நாள்.  உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் தம்பி  இவர்.   இராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் என்பது இவருடைய முழுப்பெயர்...

அக்டோபர் 23

  அக்டோபர் 23 : 1623  புகழ் பெற்ற இந்திக் கவிஞரும் துளசி ராமாயணத்தை எழுதியவருமான துளசிதாசர் காலமானார். அக்டோபர் 23 : 1943 இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவான ஜான்ஸி ராணி படைப்பிரிவு இன்று தொடங்கப்பட்டது. அக்டோபர் 23 : 1954 அகில இந்திய வானொலியில் முதன் முதலாக சங்கீத  ச ம்மேளனம் நிகழ்ச்சி ஒலிபரபப்பட்டது.

அக்டோபர் 22

அக்டோபர் 22  : 1879 இந்தியாவில் முதல் தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.  பிரிட்டி ஷாரை எதிர்த்துக் கலகம் செய்ததற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாசுதேவ் பல்வந்த் பாட்கே 20.7.1879 அன்று கைது செய்யப்பட்டார்.  இன்று அவர் மீது இவ்வழக்கு பதியப்பட்டது. அக்டோபர் 22  : 1925 தமிழ் நாவல்களுக்கு முன்னோடியாகக் கருதப்படும் பத்மாவதி சரித்திரம் எழுதிய அ.மாதவையா    சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது உயிர் துறந்தார். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர்.  அக்டோபர் 22 : 1929 இந்தியாவில் முதன் முதலாக விமானத் தபால் தலை வெளியிடப்பட்டது. அக்டோபர் 22 : 1947 கா ஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்கியது. அக்டோபர் 22 : 2008 சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு நம் நாடு இன்று அனுப்பியது.

அக்டோபர் 21

 அக்டோபர் 21 : 1799 கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின் தளபதி பானர்மென் மற்ற பாளையக்காரர்களுக்கு  ஓர் ஆணை பிறப்பித்தான்.  பாளையக்காரர்கள் யாரும் ஈட்டி, வேல், வாள் போன்ற படைக்கலங்கள் வைத்திருக்கக்கூடாது.  மீறினால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது தான் அந்த ஆணை. அக்டோபர் 21 : 1802 தனிப்பட்டவர்கள் தபால் மூலம் பார்சல் அனுப்பும் முறை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 21 : 1824 பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் ஆஸ்ப்டின் என்பவர் போர்ட்லாண்ட் சிமெண்ட் தயாரிக்க காப்புரிமை பெற்றார்.  சென்னையில் முதன் முதலாக 1904 ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டது. அக்டோபர் 21 : 1833 நோபல் பரிசை உருவாக்கிய, சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் இன்று தான் பிறந்தார்.  அக்டோபர் 21 : 1835 கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் மறைந்த தினம் அக்டோபர் 21 : 1879 தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த கார்பன் இழை மின்விளக்கு முதன் முதல் நீண்ட நேரம் எரிந்தது. அக்டோபர் 21 : 1943 சிங்கப்பூரில் இத்தே சினிமா ஹாலில் மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டு நேதாஜி சுபா ஷ் சுதந்தர இந்...

அக்டோபர் 20

 அக்டோபர் 20 : 1922 வானொலிக்காகவே எழுதப்பட்ட முதல் நகைச்சுவை நிகழ்ச்சி பி.பி.சி யில் ஒலிபரப்பப்பட்டது. அக்டோபர் 20 : 1952 தனி ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார். அக்டோபர் 20 : 1938 தன்னந்தனியாக உலகை விமானத்தில் சுற்றி வந்து சாதனை படைத்த முதல் பெண்மணி லாஸ்காட் லண்டனில் காலமானார். அக்டோபர் 20 : 2008 திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் மறைந்த நாள். கல்யாணப் பரிசு,நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை நினைவெல்லாம் நித்யா,தென்றலே என்னைத் தொடு உள்ளிட்ட பல வெற்றி படங்களின் இயக்குநர் இவர்.  ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை திரைப்படம் தான் ஜெயலலிதாவின் முதல் தமிழ்ப்படமாகும். இந்தப் படத்தின் பெயரோடு சேர்த்து அறியப்படும் வெண்ணிற ஆடை நிர்மலா,  வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பெயர்கள் இவரது படத்தின் புகழுக்குச் சான்றுகள். அக்டோபர் 20 : 2014 ராஜம் கிருஷ்ணன் மறைந்த நாள்.  இன்றைக்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கதைகள், பல்வேறு புத்தகங்களில் வெளியாகின்றன. ஒரு நிமிடத்தில் நினைத்து ஐந்து நிமிடத்தில் எழுதி முடித்த கதைகளெல்லாம் இன்று சர்வ சாதா...

அக்டோபர் 19

 அக்டோபர் 19 : 1801 சோழபுரத்தில் ஆங்கிலேயப் படைக்கும் மருதுபாண்டியருக்கும் நடந்த போரில் மருது பாண்டியர் காயத்துடன் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 19 : 1888 நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள். அக்டோபர் 19 : 1910 நோபல் பரிசு பெற்ற இந்தியர் சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த நாள். விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கு  1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  21 ஆம் தேதி இவர் மறைந்தார்.  அக்டோபர் 19 : 1937 அணுவின் கட்டமைப்பு பற்றிய ஆய்வில் உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி  எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட் கேம்பிரி ட்ஜில் காலமானார். அக்டோபர் 19 : 1970 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒலியை விஞ்சும் முதல் போர் விமானம் மிக்2, இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்டோபர் 19 : 1974 புகழ் பெற்ற நாடகக் கலைஞர் நவாப்.டி.எஸ். ராஜமாணிக்கம் காலமானார். அக்டோபர் 19 : 2003   ஆதிபராசக்தி அறக்கட்டளையின் தலைவராக இருந்த பங்காரு அடிகளார்  மாரடைப்பால் மறைந்தார். பேருந்து நடத்துனராகப் பணிபுரிந்து தொடங்கிய இவரது வாழ்க்கை பலருக்கு...

அக்டோபர் 18

 அக்டோபர் 18 : 1799 பாரிசில் ஜென்சி ஜெனீவ் கார்னெரின் என்னும் பெண் முதன் முதலாக பலூனில் உயரே சென்று பாராசூட் மூலம் கீழே குதித்தார். அக்டோபர் 18 : 1842 நியூயார்க் துறைமுகத்தில் சாம்யூல் மோர்சினால் கடலடியில் தந்திக் கம்பிகள் முதன் முதலில் அமைக்கப்பட்டன. அக்டோபர் 18 : 1851 பிரிட்டனில் முதன் முதலாக கடல் கடந்த நாடுகளுடன் தந்தித்; தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. அக்டோபர் 18 : 1928 முதன் முதலாக கலர் திரைப்படம் பிரிட்டனில் ராயல் போட்டோ கிராபிக் சொஸைட்டியில் திரையிட்டுக் காட்டப்பட்டது. அக்டோபர் 18 : 1931 தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் காலமானார். அக்டோபர் 18 : 1955 கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எமிலியோ செக்ரி என்பவரால் எதிர் புரோட்டான் ( anti proton   ) என்னும் அணு நுண்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. அக்டோபர் 18 : 2004   தமிழ்நாடு கர்நாடக இரண்டு மாநில காவல்துறைக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த தலைமறைவுக் கொள்ளையன் சந்தனக்கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள். 184  கொலைகள், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தன மரக்கடத்தல் , பல யானைகளைக் கொன்று தந்தங்களைத் ...

அக்டோபர் 17

  அக்டோபர் 17 : 1605 மொகலாயப் பேரரசர் அக்பர் காலமானார். அக்டோபர் 17 : 1892 கோயம்புத்தூர் தந்த உலகப் பொருளாதார நிபுணர் ஆர். கே. சண்முகம் செட்டியார் பிறந்த நாள்.  1947 ஆம் ஆண்டு நம் பாரத நாடு  விடுதலை அடைந்த பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர் இவர்.   நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமை கொண்டவர்.  தமிழிசை இயக்கம் இவர் உருவாக்கியது தான்.  மே 5, 1953 இவர் மறைந்த நாள்.  அக்டோபர் 17 : 1922 பிரிட்டன் வானொலியில் முதன் முதலாக நாடகம் ஒலிபரப்பப்பட்டது. அக்டோபர் 17 : 1933 ஜெர்மனியில் ஹிட்லரின் இனவெறி தீவிரமானதால் ஆல்பர்ட் ஜன்ஸ்டின் அங்கிருந்து வெளியேறி நியூஜெர்சியில் பிரின்ஸ்ட்டனில் குடியேறினார். அக்டோபர் 17 : 1940 காந்தி தனிநபர் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.  முதல் சத்தியாகிரகி வினோபா. அக்டோபர் 17 : 1981 கவியரசு கண்ணதாசன் அமெரிக்காவில் காலமானார்.

அக்டோபர் 16

அக்டோபர் 16 : 1700 ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் பிறந்த நாள். அலைபாயுதே... கண்ணா,  என் மனம் அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே... கண்ணா... என்ற அமரத்துவம் வாய்ந்த பாடல் வரிகளை எழுதியவர் இவர் தான்.  அக்டோபர் 16 : 1799 வீரபாண்டிய கட்டபொம்மன் ‘கயத்தாறு’ என்னுமிடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார். அக்டோபர் 16 : 1846 பாஸ்டனில் மாஸா சூஸட் பொது மருத்துவமனையில் டாக்டர் காலின் வாரன் என்பவர் மயக்க மருந்து கொடுத்து ஒரு இளைஞனின் தாடையிலுள்ள கட்டியை அகற்றினார்.   மயக்க மருந்து கொடுத்துச் செய்யப்பட்ட முதல் அறுவைச் சிகிச்சை இது. அக்டோபர் 16 : 1881 தமிழறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பிறந்த நாள் . அக்டோபர் 16 : 1900 ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி பிறந்த நாள் . இவர் தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வைக்கும் வழக்கம் இருந்தது. அதன் வழியே வாசிக்கும் பழக்கம் குடும்பம் முழுமைக்கும் அமைந்திருந்தது. கதை, கட்டுரை என்ற எந்தப் படைப்புக்குள்ளும் போகாமல்  ஆராய்ச்சிக்...

அக்டோபர் 15

 அக்டோபர் 15 : 1582 இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்சு முதலான நாடுகள் கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்ற ஆரம்பித்தன.  அக்டோபர் 5ம் தேதி 15 ஆம் தேதியாகக் கணக்கிடப்பட்டது. அக்டோபர் 15 : 1798 ஜாக்ஸன் கட்டபொம்மனை நடத்திய விதம் பற்றி விசாரித்த லெப் டி னல் கர்னல் பிரௌன் ஓர்ம், ஜான்காஸ் மேயர் ஆகியோர் அடங்கிய குழுவிடம் கட்டபொம்மன் ஆஜரானார். கட்டபொம்மனை தேவையில்லாமல்  ஜாக்ஸன்  அவமானப்படுத்தினார் என இக்குழு கண்டித்தது.   இராமநாதபுரம் அரண்மனையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி கிளாக்கின் ஊதியத்திற்கு ஈடாக கட்டபொம்மன் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் இக்குழு அறிவித்தது. அக்டோபர் 15 : 1840 இன்றைய மாநிலக் கல்லூரியின் முன்னோடியான ‘எடின்பார்க் ஹொம்' எழும்பூரில் இன்று வாடகைக் கட்டடத்தில் துவக்கப்பட்டது. அக்டோபர் 15 : 1854 இந்தியாவில் முதன் முறையாக நாலணா போஸ்டேஜ் ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.   கல்கத்தாவில் அச்சடிக்கப்பட்ட இந்த ஸ்டாம்ப் தான் ஆசியாவின் முதல் இருவண்ண ஸ்டாம்ப். அக்டோபர் 15 : 1855 ஓரங்களில் துளையிடப்பட்ட ஸ்டாம்ப் முதன் முறையாக வெளியிடப்ப...

அக்டோபர் 14

 அக்டோபர் 14 : 1240 மொகலாயப் பேரரசி ன் ஒரே பெண் அரசியான ரஸியா சுல்தானா, அவளது கணவர் ஜலாலுத்தீன் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இல்டுமிஷின் மூன்றாவது மகன் முஸீத்தீன் பெக்ரம்  டில்லி சுல்தானாக முடிசூட்டிக் கொண்டான். அக்டோபர் 14 : 1612 பாரீசிலிருந்து வெளிவந்த ‘ஜெர்னல் ஜெனரல் டி அஃபிச்சஸ்’ என்னும் பத்திரிக்கையில் முதன் முதல் விளம்பரம் வந்தது. அக்டோபர் 14 : 1884 அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்டமான் தான் கண்டுபிடித்த போட்டோ கிராபிக் பிலிமிற்குக் காப்புரிமை பெற்றார். அக்டோபர் 14 : 1920 ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முதன் முறையாகப் பெண்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அக்டோபர் 14 : 1942 எழுத்தாளர் சிவசங்கரி பிறந்த நாள். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பலநிலைகளில் புகழ் பெற்றவர். சின்ன நுற்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?  என்ற இவரது படைப்பு புகழ் பெற்ற ஒன்று. அக்டோபர் 14 : 1961 மேற்கு வங்கத்தில் சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் எஞ்சின் ஓட ஆரம்பித்தது.  இதன் பெயர் ‘லோக மான்யா’. அக்டோபர் 1...

அக்டோபர் 13

 அக்டோபர் 13 : 1792 அமெரிக்காவில் வா ஷிங்டனில் வெள்ளைமாளிகை கட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அடிக்கல் நாட்டினார். அக்டோபர் 13 : 1884 கிரீன்விச் மீன் டைம் உலகம் முழுவதும் பொதுவான நேரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்டோபர் 13 : 1904 சிக்மண்ட் ப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்னும் நூல் வெளியானது. அக்டோபர் 13 : 1908 திருநெல்வேலி செ ஷன்ஸ் நீதிமன்றம் விதித்த கொடுமையான தண்டனையை எதிர்த்து வ.உ.சிதம்பரம் பிள்ளையும். சுப்பிரமணிய சிவாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அக்டோபர் 13 : 1911 சகோதரி நிவேதிதா காலமானார். அக்டோபர் 13 : 1936 வீணை இசை வித்துவான்  சிட்டிபாபு பிறந்த தினம். அக்டோபர் 13: 1956 தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட தன் வாழ்க்கையைத் தந்த சங்கரலிங்கனார் மறைந்த நாள். 1. சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும்,  2. அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்,   3. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.     போன்ற கோரிக்கைகளுடன், 27.7.1956-இல் அவர்  உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.  அப்போதிருந...

அக்டோபர் 12

 அக்டோபர் 12 : 1492 கொலம்பஸ் சான்சால்வடாரில் காலடி வைத்த நாள்.  அமெரிக்காவில் இந்த நாள் கொலம்பஸ் தினமாக பெரும்பாலான மாநிலங்களால் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 12 : 1785 சென்னையிலிருந்து மெட்ராஸ் கூரியா என்னும் செய்தி ஏடு வெளிவந்தது. அக்டோபர் 12 : 1849 பிரிட்டனில் சேஃப்டி பின் தயாரிப்பதற்கான காப்புரிமை சார்லஸ் ரௌலி என்பவருக்கு வழங்கப்பட்டது. அக்டோபர் 12: 1891 ச. வையாபுரிப் பிள்ளை பிறந்த நாள். இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் இவர் . ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர்,  மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். அக்டோபர் 12 : 1901 அமெரிக்க ஜனாதிபதி தியொடர் ரூஸ்வெல்ட் “எக்ஸிக்யூட்டிவ் மாளிகை” என்னும் பெயரை ‘வெள்ளை மாளிகை’ என மாற்றினார். அக்டோபர் 12: 1912 நெ. து. சுந்தரவடிவேலு பிறந்த நாள்.  காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பொதுக் கல்வி இயக்குனராக இருந்தவர். இவர் ஆலோசனைப் படி தான் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்தங்கிய பல குடும்பங்களிலிருந...

அக்டோபர் 11

 அக்டோபர் 11 : 1737 கல்கத்தா நிலநடுக்கத்தால் 3 லட்சம் மக்கள் மடிந்தனர். அக்டோபர் 11 : 1803 இரண்டாவது பிரிட்டி ஷ் மராத்தா போரில் இந்தியாவின் படை பிரிட்டிஷாரிடம்  சரணடைந்தது. அக்டோபர் 11: 1826 மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும். அக்டோபர் 11: 1902 ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாள். அக்டோபர் 11 : 1911 பாரதியார் நூல்களைப் பறிமுதல் செய்ய சென்னை அரசால் ஆணை வெளியிடப்பட்டது. அக்டோபர் 11 : 1919 விமானப் பயணத்தின் போது உணவு பரிமாறும் முறை முதன் முதலாக லண்டன் - பாரிஸ் பயணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 11 : 1932 தொலைக்காட்சி மூலம் அரசியல் கட்சி பிரச்சாரம் செய்யும் முறை நியூயார்க்கில் துவங்கப்பட்டது. அக்டோபர் 11 : 1976 பம்பாயிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானம் எரிந்து விழுந்தது.  அதில் பயணம் செய்த பழைய காங்கிரஸ் தலைவர் பொன்னப்ப நாடார், நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் பலியானார்கள். அக்டோபர் 11 : 2011 சாக்சபோன் இசைக் கலைஞர்  கத்ரி கோபால்நாத் மறைந்த தினம். கே. பாலச்சந்தரின் இயக்கத...

அக்டோபர் 10

அக்டோபர் 10 : 1801 தொண்டைமானின் படைகளுக்கும் ஊமைத்துரை, முத்து வெள்ளை நாயக்கர் படைகளுக்கும் திண்டுக்கல்லில் நடந்த மோதலில் தொண்டைமான் படை தோல்வியடைந்தது. அக்டோபர் 10 : 1857 சிப்பாய்க் கலகம் என்று குறிப்பிடப்படும் முதல் விடுதலைப் போரில் கர்னல் எட்வர்ட் கிரேட் ஹெட்ழன் படை ஆக்ராவில் புரட்சியாளர் படையை முறியடித்தது. அக்டோபர் 10 : 1896 ராஜஸ்தான்-ஜோத்பூரில்  வானியல் ஆய்வு மையம் துவங்கப்பட்டது. அக்டோபர் 10: 1906 உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளரும்  இந்திய நாவல் ஆசிரியருமான  ஆர்.கே.நாராயணன் பிறந்த நாள்.  ஆர். கே. நாராயணன் என்பது ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன்  என்பதன் சுருக்கம். தன்னுடைய நாவல்களுக்காக இவர் உருவாக்கிய மால்குடி என்ற ஒரு கற்பனை   கிராமம்  உலகம் முழுவதும் புகழ்பெற்று ஒரு புது வரலாறு படைத்தது.  அந்தப் பெருமை என்றும் நிலைத்திருக்கும் வகையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மால்குடி எக்ஸ்பிரஸ் என இந்திய ரயில்வே பெயர் வைத்துள்ளது.  16024 MALGUDI EXPRESS, YELHANKA JN (YNK) To MYSURU JN (MYS) பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண...