பிப்ரவரி 4, 1747
பரமார்த்த குரு கதை, தேம்பாவணி,
சதுரகராதி, தொன்னூல் விளக்கம் முதலிய நூல்களை எழுதிய வீரமாமுனிவர் மறைந்த நாள்
இன்று.
எங்கோ பிறந்தும் இங்கேயே வாழ்ந்தது வரலாறானவர்
பிப்ரவரி
4, 1916
காசி இந்து சர்வ கலாசாலையை
காந்திஜி தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி 4, 1922
இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பாடகர் பண்டிட் பீம்சேன் சோசி பிறந்த நாள்.
இவரது பக்தி இசைப்பாடல்களும் பஜனைப்பாடல்களும் உலகம் முழுதும் பிரபலமானவை.
பாரத் ரத்னா விருது பெற்றவர் இவர்.
பிப்ரவரி 4, 1943
பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் பிறந்த நாள்.
பிப்ரவரி 4, 1944
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில்
அமைந்த சுதந்திர இந்திய அரசு ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்க
டில்லி சலோ என்ற முழக்கத்துடன் படையெடுத்தது.
பிப்ரவரி
4, 1974
உலகப் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சத்யந்திரநாத் போஸ் காலமானார்.
கதிர்வீச்சின் தன்மைகளைப் பற்றிய போஸ் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற கோட்பாட்டைக்
கண்டுபிடித்தவர் இவர் .
பிப்ரவரி
4 1978
ஸ்ரீலங்காவின் முதல் அதிபராக
ஜெயவர்தனே பதவியேற்றார்.
பிப்ரவரி 4 2023
பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback