பிப்ரவரி
14, 1556
அக்பரின் தந்தை மரணமடைந்தார் என்ற
செய்தி வந்தவுடன் பைராம் கான் அங்குள்ள தோட்டத்தில் அக்பரை அரியணையில் அமர்த்தி
மன்னராக இன்று பிரகடனம் செய்தார்.
பிப்ரவரி
14,1790
பாஞ்சாலங்குறிச்சி மன்னராக
வீரபாண்டிய கட்டபொம்மன் முடி சூட்டிக்கொண்டார்.
பிப்ரவரி 14,1798
பெரிலியம் என்னும் தனிமத்தைக்
கண்டுபிடித்ததாக பாரிஸ் அகாடமி ஆப் சயின்ஸ்க்கு பிரெஞ்சு வேதியல் விஞ்ஞானி
எல்.வாக்கியுலின் இன்று அறிவித்தார்.
பிப்ரவரி 14,1924
ஐபிஎம் நிறுவனம் (IBM) இன்று தான் தொடங்கப்பட்டது.
பிப்ரவரி 14,1952
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிறந்த நாள்.
மக்களவையின் எதிர்கட்சித் தலைவராகவும் டில்லியின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர் இவர்.
பிப்ரவரி 14,1998
கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
கோவை தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக அத்வானி பிப்ரவரி இன்று (14ம் தேதி) கோவை வரவிருந்த நிலையில் அவரைக் கொல்ல அல் உம்மா தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தனர். அதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
மிக சக்தி வாய்ந்த பல குண்டுகள் வெடிக்காமல் இருப்பதை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தனர். அந்தக் குண்டுகள் வெடித்தால் கோவை நகரின் பெரும்பகுதி சிதைந்து விடும் அபாயம் இருந்தது.
வைக்கப்பட குண்டுகளை தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடி பாதுகாப்பாக அகற்றிய ராணுவ வீரர்களின் தியாகத்தை நேரடியாகப் பார்த்த கோவை மக்கள் சிலிர்த்துப்போயினர்.
தங்கள் பணியினை முடித்துப் புறப்பட்ட அந்த வீரர்களை கோவை நகரமே தெருவில் நின்று நெகிழ்ச்சியோடும் நன்றியோடும் வழியனுப்பிவைத்தது. The real heroes என்று தேசத்தின் முக்கியமான நாளிதழ்கள் புகைப்படங்களுடன் அவர்களின் தியாகத்தைப் புகழ்ந்தன.
அந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த முக்கிய குற்றவாளியான அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி எஸ்.ஏ. பாஷா 2024 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.
கல்லூரி மாணவர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கிய யூடியூப் இன்று தான் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback