பிப்ரவரி
2, 1801
பாளையங்கோட்டை சிறையில் இருந்த
ஊமைத்துரை மீட்கப்பட்ட நாள்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும் ஊமைத்துரையையும் மற்றவர்களையும் கைதுசெய்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி விட்டான் பானர்மென். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டான். கொத்தமரம் புலிக்குத்தி நாயக்கர் தன் ஆட்களை விறகு விற்பவர்கள் போல வேடம் அணிவித்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பி சிறைக் கதவை உடைத்து இன்று ஊமைத்துரை தப்பித்துப் போகும் படி செய்தார்.
பிப்ரவரி
2, 1874
இராமலிங்க வள்ளலார் இன்று வெள்ளிக்கிழமை மேட்டுக்குப்பத்தில் மறைந்தார்.
பிப்ரவரி 2, 1907
தனிம வரிசை அட்டவணையைத் தந்த புகழ்பெற்ற ரஷ்ய வேதியியல் விஞ்ஞானி மென்டலீவ் இன்று காலமானார்.
பிப்ரவரி 2,1913
இயற்கையோடு இயைந்த வேளாண்மை குறித்த விழிப்புணர்வை உலகெங்கும் பரப்பிய ஜப்பான் வேளாண் விஞ்ஞானி மசனோபு புக்குவோக்கா பிறந்த நாள் .
பிப்ரவரி 2, 1915
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான குஷ்வந்த் சிங் பிறந்த நாள்.
பிப்ரவரி 2, 1960
தமிழ் ஆய்வுகளில் தனிப்பெயர் பெற்ற மு. இராகவையங்கார் மறைந்த தினம்.
Comments
Post a Comment
Your feedback