பிப்ரவரி
18,1564
உலகப் புகழ்பெற்ற ஓவியரும்
சிற்பியும் கட்டடக்கலை வல்லுநருமான இத்தாலியைச் சார்ந்த மைக்கேல் ஏஞ்சலோ
காலமானார்.
பிப்ரவரி
18,1688
பில்கிரீம்ஸ் புரொகிரஸ்
என்னும் நாவலின் ஆசிரியரும் ஆங்கில நாவல் இலக்கிய முன்னோடியுமான ஜான் பனியன்
காலமானார்.
பிப்ரவரி 18,1745
இவர் மட்டும் இல்லாதிருந்தால் மின்அழுத்தம் என்ற வார்த்தையே நமக்கு தேவைப்பட்டிருக்காது. முதல் மின்கலத்தை இவர் தான் உருவாக்கினார். நாம் இன்று பயன்படுத்தும் வோல்ட் (volt), வோல்ட்மீட்டர் (Voltmeter) போன்ற வார்த்தைகள் இவர் பெயரைத்தான் குறிக்கின்றன.
அவர் பெயர் அலெசான்றோ வோல்ட்டா (Alessandro Volta). அவர் இன்று தான் பிறந்தார்.
மீத்தேன் என்ற வாயுவைக் கண்டறிந்தவரும் இவர் தான்.
பிப்ரவரி 18,1836
விவேகானந்தரின் குருவான ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த நாள்.
ஒவ்வொரு மதமும் ஒரே இறைவனை அடைய வெவ்வேறு வழிகளைச் சொல்லித்தருகிறது என்பதை வலியுறுத்திய மகான் இவர்.
பிப்ரவரி 18,1926
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் பிறந்த நாள்.
இவரை கதாநாயகனாகக் கொண்டு பிரபஞ்சன் ஒரு நாவல் எழுதியுள்ளார். காகித மனிதர்கள் என்பது அந்த நாவலின் பெயர்.
சூரிய நிறமாலை பற்றி விரிவாக ஆய்வு
நடத்தி, சூரியனில் ஹைட்ரஜனே பெருமளவு அடங்கியுள்ளது என்று கூறிய அமெரிக்க விஞ்ஞானி
ஹென்றி நாரிஸ் இன்று காலமானார்.
பிப்ரவரி
18,1967
அணுகுண்டு தயாரிப்பதில் பெரும்
பங்கு வகித்த இவர் முதல் அணுகுண்டு சோதனையை 1945 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அன்று
வெற்றிகரமாக முடித்தார். அணுகுண்டு சோதனை முடிந்ததும் "நானே இறப்பு உலகங்களை
அழிப்பவன்" எனும் பகவத் கீதை வரிகளை மேற்கோளாக காட்டிய அந்த அமெரிக்கா
விஞ்ஞானி டாக்டர் ஜி.ராபர்ட் ஒப்பநெயிமர் இன்று காலமானார்.
பிப்ரவரி
18,1980
எம்ஜிஆர் தலைமையிலான அ.தி.மு.க
அமைச்சரவை கலைக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
பிப்ரவரி
18,1992
கும்பகோணத்தில் மகா மகத்தின் போது
ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 48 பேர் இறந்தனர்.

Comments
Post a Comment
Your feedback