பிப்ரவரி 16, 1471
விஜயநகரப் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவராக இருந்த கிருஷ்ண தேவராயர் பிறந்த தினம்.
போர்சிகீசிய யாத்திரிகர் டொமிங்கோ பயஸ் (Domingos Paes), மற்றும் நுனிஸ் (Nuniz) ஆகியோரின் குறிப்புகள் மூலமாகவே கிருஷ்ண தேவராயர் பற்றிய நிறைய விபரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
தெனாலிராமன் கதைகள் மூலமாக இந்தியா முழுவதும் இன்றும் பேசப்படுவர் இவர். தொலைக்காட்சித் தொடர்களும் இவரை இன்றும் புகழோடு வைத்திருக்கின்றன.
பிப்ரவரி
16, 1954
இலக்கிய அறிஞர் ரசிகமணி டி கே
சிதம்பரநாத முதலியார் காலமானார்.
பிப்ரவரி 16, 1957
எலக்ட்ரானின் மின் சுமையை அளந்து கூறியவரும் வாயுக்களின் மின்விசை ( Electricity in Gases) எனும் நூலை எழுதியவருமான ஜான் சீலி எட்வர்ட் காலமானார்.
பிப்ரவரி 16, 2006
பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் மறைந்த நாள்.
கவிதை அரங்கேறும் நேரம்
மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும் ...
ஜெயச்சந்திரன், ஜானகி குரல்களில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வரும் அழகான பாடல் இது.
பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய பாடல் இது.

Comments
Post a Comment
Your feedback