பிப்ரவரி 24,1920
உலகின் மிக வயதான யோகாசன ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்றிருந்த நானம்மாள் பிறந்த தினம். கோவையைச் சேர்ந்த இவர் 98 வயதான போதும் யோகாசன பயிற்சி ஆசிரியராக விளங்கியவர்.
பிப்ரவரி
24,1938
நைலான் இழைகள் பயன்படுத்தப்பட்ட பல்
துலக்கப் பயன்படுகின்ற பிரஷ் முதன்முதலாக உற்பத்தி செய்யப்பட்டது.
பிப்ரவரி
24,1948
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா
பிறந்த நாள்.
பிப்ரவரி 24, 1955-
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த நாள்.
பிப்ரவரி 24,1986
கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவிய ருக்மிணி தேவி அருண்டேல் மறைந்த நாள்.
பரதநாட்டியம் சாதாரண மக்களும் பயிலக்கூடிய உன்னதமான கலை என்ற நம்பிக்கையை எல்லோருடைய மனதிலும் விதைத்தவர் இவர். 1977 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தபோது அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback