பிப்ரவரி 8, 1819
சாதாரண மோகன்தாஸாக இருந்த காந்தி 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற நுலைப் படித்து தன்னை செம்மைப்படுத்திக் கொண்டார். அதுவே அவர் மகாத்மாவாக அடிப்படை என்றெல்லாம் படித்திருப்போம்.
அந்த 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' அதாவது (Unto This Last) என்ற நூலை எழுதிய ஜான் ரஷ்கின் இன்று தான் பிறந்தார். பின்னாளில் காந்தியடிகள் அந்த நூலை தன்னுடைய தாய்மொழியான குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பிப்ரவரி 8, 1834
வேதியியலில் தனிம வரிசை ஆவர்த்தன அட்டவணையை முதலாவதாக உருவாக்கிய ரஷ்ய விஞ்ஞானி திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் இன்று பிறந்தார்.
வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்று, தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார் இவர்.
பிப்ரவரி 8, 1897
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சாஹிர் ஹுசைன் பிறந்த நாள்.
இவர் 1967 இல் இருந்து 1969 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.
பிப்ரவரி
8, 1916
நேருவுக்கும் கமலாவுக்கும் புது
டெல்லியில் திருமணம் நடந்தது.
பிப்ரவரி
8, 1921
தமிழறிஞர், எழுத்தாளர், சென்னை கம்பன்
கழகத்தின் நிறுவனர்களுள் ஒருவர் மற்றும் தலைவர் கம்ப இராமாயண ஆய்வாளர் என பன்முக அடையாளம்
கொண்ட நீதிபதி மு.மு. இஸ்மாயில் பிறந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback