பிப்ரவரி
9, 1818
லித்தியம் என்னும் உலோகம்
கண்டுபிடிக்கப்பட்டது.
பிப்ரவரி 9,1919
இசைமேதை மதுரை சோமு பிறந்த நாள்.
'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைக் கேட்டு மயங்காதவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடியவர் மதுரை சோமு.
மேடைகளில் மட்டுமே பாட விருப்பம் கொண்ட இவரை இந்த தெய்வீகப் பாடலைப் பாடவைத்தது திரையுலகம்.
மதுரை சோமு என்று அழைக்கப்படும் இவர் உண்மையில் மதுரைக்குச் சொந்தமானவர் இல்லை. இவர் பிறந்தது சுவாமிமலை. பின்னர் குடிபெயர்ந்து தான் மதுரைக்கு வந்தார்.
இவர் மனைவியின் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இருக்கக்கூடிய திருக்கருகாவூர். இளமைக் காலத்தில் இவர் இசை பயின்றது சுவாமிமலை அருட்பாக் கலைஞர் ஸ்ரீனிவாச பிள்ளையிடம். அந்த வேளையில் இவர் இசை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. மல்யுத்தத்தையும் சேர்த்துக் கற்றுக் கொண்டார்.
காம்போதி சங்கராபரணம், மலையமாருதம் ஆகிய ராகங்களில் மணிக்கணக்காகப் பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர் மதுரை சோமு.
எந்த ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டாலும் இவருடைய குரல் வளத்தில் அது நிறைவு பெற்றுவிடும் என்பது இசை வல்லுனர்களின் விமர்சனம்.
இவர் ஐ.நா சபையிலும் பாடியிருக்கிறார். பத்மஸ்ரீ பட்டமும் பெற்றிருக்கிறார்.
இந்த இசைமேதை சுவாமி மலையில் பிறந்த நாள் பிப்ரவரி 9, 1919.
பிப்ரவரி 9,1949
வ உ சிதம்பரனார் என்னும் நீராவி
கப்பல் தூத்துக்குடியில் விடப்பட்டது.
பிப்ரவரி
9,1951
இந்தியாவில் முதன் முதலாக மக்கள்
தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
பிப்ரவரி
9,1969
உலகின் மிகப்பெரிய விமானமான போயிங்
747 தன் முதல் பயணத்தை இன்று துவக்கியது.
பிப்ரவரி 9, 1996
வீணை சிட்டிபாபு மறைந்த நாள். வீணை இசையில் புகழ்பெற்றதால் சிட்டி பாபு என்ற இவருடைய பெயரோடு வீணை பிரிக்கமுடியாத ஒன்றாகி வீணை சிட்டிபாபு என்றே அழைக்கப்பட்டார்.
பிப்ரவரி 9, 2001
நகைச்சுவை எழுத்தாளர்களுள் முக்கியமானவரான சாவி மறைந்த நாள்.
சா.விசுவநாதன் என்பது இவருடைய முழுப்பெயர்.கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார்.
வாஷிங்டனில் திருமணம் என்ற இவருடைய நகைச்சுவை நாவல் பெரும் புகழ்பெற்ற நாவல்.
பிப்ரவரி 9, 2008
சமூக சேவகர் பாபா ஆம்தே மறைந்த நாள்.
இவருடைய இயற்பெயர் முரளிதர் தேவதாசு ஆம்தே. பத்ம ஸ்ரீ , பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர் இவர். இவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவத்தை தன்னுடைய வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தவர்.


Comments
Post a Comment
Your feedback