பிப்ரவரி
19,1855
தமிழ்த் தாத்தா என்று புகழ் பெற்ற உ.
வே. சாமிநாதையர் பிறந்த நாள்.
கண்ணுஞ்
சடையாமல் கையுந் தளராமல்
உண்ணப்
பசியெழுவ தோராமல்- எண்ணி எண்ணிச்
செந்தமிழ்த்
தாய்க்கு நீ செய்த திருத்தொண்டுக்கு
இந்த
நிலத் துண்டோ இணை ?
(உ. வே. சா குறித்து கவிமணி...)
உ.வே.சாமிநாதய்யர் அழியும் நிலையில் இருந்த, பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு, தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தவர்.
90 புத்தகங்களுக்கு மேல் அச்சிட்ட இவர், 3000 ஏட்டுச்சுவடி, கையெழுத்து ஏடுகளையும் வைத்திருந்தார்.
சீவக சிந்தாமணி போன்ற அரிய படைப்புகளை அழிய விடாமல் காக்க வேண்டும் என்று அதை பதிப்பில் கொண்டுவந்தவர் இவர்.
சீவக சிந்தாமணிக்குப் பின்னர், பத்துப்பாட்டு நூலையும் இவர் வெளியிட்டார்.
பிப்ரவரி 19,1878
கிராமபோன் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் இன்று அதற்கான காப்புரிமம் பெற்றார்.
பிப்ரவரி 19,1915
கோபால கிருஷ்ண கோகலே மறைந்த நாள்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு
எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில்
முக்கியமானவர் கோகலே.
பிப்ரவரி 19,1947
நகைச்சுவை நடிகர் பாண்டு பிறந்த நாள்.
இவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பிரபலமான 'பஞ்சு பட்டு பீதாம்பரம்' தொடரை இவருடைய நடிப்புக்காகவே பார்த்தவர்கள் பலர். தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் ஒரு திறமையான ஓவியரும் கூட. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இவர் மீது அளவில்லாத பாசம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைத் தொடங்கியபோது, அதிமுகவின் கொடியையும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையையம் வரைந்து வடிவமைத்த ஓவியர் இவர்தான்.
அதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். நடித்த குமரிக்கோட்டம், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் பணியை எம்.ஜி.ஆர். இவரிடம் தான் ஒப்படைத்தார்.
கொரோனா தொற்று பலி கொண்ட பிரபலமானவர்களுள் இவரும் ஒருவர். கொரோனா சிகிச்சை பலனின்றி மே 6, 2021 அன்று மறைந்தார்.
பிப்ரவரி 19,1956
ஆச்சார்ய நரேந்திர தேவ் காலமானார்.
பிப்ரவரி
19, 1988
புகழ்பெற்ற நாடக நடிகரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி. சகஸ்ரநாமம் இன்று சென்னையில் காலமானார்.
1913 நவம்பர் 29, அன்று கோவை சிங்காநல்லூரில் பிறந்தவர் இவர். நாடக நடிகராக பெரும்புகழ் பெற்றவர். நாடகக் கலையை அழியாமல் காப்பாற்ற முனைந்தவர்களுள் இவர் முக்கியமானவர். இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். 200க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

Comments
Post a Comment
Your feedback