மார்ச் 1 1639
சென்னை மாநகராட்சியின் பிறந்த நாள் இது என்று சொல்லலாம். கூவம் நதிக்கரையில் கடற்கரை ஓரத்தில் ஆங்கிலேயர்கள் ஒரு பண்டகசாலையை நிறுவினார்கள். அந்தப் பண்டக சாலையைச் சுற்றி பின்னாளில் கட்டிய கோட்டை தான் செயின் ஜார்ஜ் கோட்டை.
மார்ச் 1,1640
செயின் ஜார்ஜ் கோட்டை இன்று தான் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
வேதியலில் ரேடியோ வேதியியல் துறை பிறந்தநாள்.
பொட்டாசியம் சல்பேட்டின் தன்மைகளைப் பற்றி ஆய்வு செய்யும் போது இயற்கையாகவே அதற்கு கதிர்வீச்சுத் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒளிப்படத் தகட்டின் மீது அது வினை புரிவதும் தெரிந்தது. இந்தக் கண்டுபிடிப்புத் தான் ரேடியோ வேதியல் துறை என்ற ஒரு புதிய துறை பிறக்க வழி வகுத்தது.
மார்ச் 1,1908
பீகாரில் ஜாம்செட்பூர் என்று இன்று கூறப்படுகின்ற சாக்ஸி என்னும் இடத்தில் இந்தியாவின் முதல் இரும்பு எக்கு கம்பெனி நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி துவங்கியது.
மார்ச் 1,1910
M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள்.
தமிழ்த்திரை வரலாற்றில் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் தான்.
நாடகத் துறையில் தனது வெண்கலக் குரலால் ரசிகர்களை வசப்படுத்தியிருந்த ஏழிசை ஏந்தல், கந்தர்வகான ஜோதி எனப் புகழ் மகுடம் சுமந்திருந்த பாகவதர் திரைப்படத் துறையில் நுழைந்த போது நல்ல வரவேற்பு கிடைத்தது.
1937 இல் சிந்தாமணி படம் வெளிவந்தது. அதே ஆண்டின் இறுதியில் அம்பிகாபதி படம் வெளிவந்தது. இரண்டு படங்களும் சாதனைப் படங்கள். திரையிட்ட இடங்களில் எல்லாம் ஒரு வருடம் ஓடியது. பாகவதரின் புகழ் திரும்பிய பக்கமெல்லாம் பேசப்பட்டது.
கலை மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தாரோ அதேபோல நாட்டுப்பற்றும் கொண்டவர் பாகவதர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி இருந்தபோது இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது. அந்தப் போரில் ஆங்கில அரசுக்கு நிதி தேவைப்பட்டது. அந்த வேளையில் பாகவதர் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி பெரும் நிதியை அரசிடம் அளித்தார். பாகவதரின் நாட்டுப்பற்றை அன்றைய கவர்னர் பெரிதும் பாராட்டினார்.
பின்னர் போர் முடிவுக்கு வந்த நிலையில் ஆங்கிலேய அரசு தங்களுக்கு நெருக்கடி காலத்தில் உதவிய பாகவதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் திருச்சியில் அரசுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க முன் வந்தது. ஆனால் பாகவதர் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
அன்று அரசு பாகவதருக்குக் கொடுக்க விரும்பிய நிலத்தில் தான் இன்று திருச்சி பாய்லர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இன்று 1.3.1910 தியாகராஜ பாகவதர் பிறந்தநாள்.
மார்ச் 1,1992
பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் என அழைக்கப்படும் சூலமங்கலம் ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகிய சகோதரிகளுள் ஒருவரான சூலமங்கலம் ராஜலட்சுமி மறைந்த நாள்.


Comments
Post a Comment
Your feedback