கணித மேதை ராமானுஜம் ராயல்
சொசைட்டியில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிப்ரவரி 28 ,1928
ஒளி உட்புகு தன்மையுடைய திட, திரவ,
வாயுப் பொருள்களின் வழியே ஒளி செல்லும் போது அதன் தன்மையில் ஏற்படும் மாறுதல்களைக்
கண்டுபிடித்ததாக நம் நாட்டு அறிவியல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன் அறிவித்தார்.
இந்தக் கண்டுபிடிப்பு தான் இன்று ராமன்
விளைவு என்று குறிப்பிடப்படுகிறது.
பிப்ரவரி 28 ,1936
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு மறைந்த நாள்.
பிப்ரவரி
28 ,1948
இன்று பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை
விட்டு வெளியேறின.
பிப்ரவரி
28 ,1963
சுதந்திர இந்தியாவின் முதல்
ஜனாதிபதியான பாபு ராஜேந்திர பிரசாத் பாட்னாவில் காலமானார்.
பிப்ரவரி
28 ,1967
டைம் பத்திரிக்கையை நிறுவி உலகப்
புகழ்பெற்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் ஹென்றி ராபின்சன் இன்று காலமானார்.
பிப்ரவரி 28 ,1969
மேண்டலின் ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள்.
மேண்டலின் இசைக்கருவியில் இவருடைய கர்நாடக சங்கீத இசைக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
சத்திய சாயி பாபாவின் பக்தர் இவர்.
பிப்ரவரி
28 ,1992
நம் நாட்டில் இந்த ஆண்டு முதல் பிப்ரவரி 28 அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பிப்ரவரி 28 ,2003
திரைப்பட நடிகர் மேஜர் சுந்தரராஜன் மறைந்த நாள்.
மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில் இவரது நடிப்பு பெரும்பாரட்டைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சுந்தர்ராஜன் என்ற இவரது பெயரோடு மேஜர் சேர்ந்துவிட்டது. பின்னாளில் அந்த நாடகம் மேஜர் சந்திரகாந்த் என்ற அதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதிலும் இவரே நடித்திருந்தார்.

Comments
Post a Comment
Your feedback