பிப்ரவரி
26, 1815
எல்பா தீவில் சிறை
வைக்கப்பட்டிருந்த நெப்போலியன் அங்கிருந்து இன்று தப்பிச் சென்றார்.
பிப்ரவரி
26, 1935
ரேடாரின் செயல் திறனை ராபர்ட்
வாட்சன் வாட் இன்று செய்து காட்டினார். அப்போது இதற்கு ரேடார் என்ற பெயர்
வைக்கப்படவில்லை. அமெரிக்கா கடற்படையைச் சார்ந்த கமாண்டர் எஸ்.எம்.டக்கர் என்பவர்
தான் இதற்கு ரேடார் என்ற பெயரைச் சூட்டினார். இதற்கு முன்பே ஜெர்மன் கடற்படையைச்
சார்ந்த ரூடால்ப் இத்தகைய கருவியைக் கண்டுபிடித்தார் என்றாலும் பயன்படுகின்ற
வகையில் முதன் முதலில் செய்தவர் வாட் தான்.
பிப்ரவரி 26,1966
"அரும்பாடுபட்டுப்
பெற்ற சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றிக் கொள்ள ஒரு கோடி வீரர்கள்
அடங்கிய வலிமைமிக்க படைபலம் நமக்குத் தேவை" என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்
பம்பாய் பொதுக்கூட்டத்தில் முழங்கியவரும் "இந்த வீரரின் தீர்க்கதரிசனத்தால்
தான் நாட்டுப்பற்று மிகுந்த ஆண் பெண்கள் அடங்கிய இந்திய தேசிய ராணுவத்தை நிறுவ
முடிந்தது" என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் போற்றப்பட்டவருமான விடுதலை
வீரர் வி.டி.சாவர்க்கர் பம்பாயில் காலையில் 11.10 க்கு காலமானார்.

Comments
Post a Comment
Your feedback