பிப்ரவரி
13, 1879
கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட
வீராங்கனை என பன்முக அடையாளம் கொண்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாள்.
பிப்ரவரி
13, 1907
காஞ்சி பரமாச்சாரிய
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் இன்று 68 வது பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றார்.
பிப்ரவரி
13, 1929
பென்சிலினியம் பற்றிய ஆய்வுக்
கட்டுரையை டாக்டர் அலெக்ஸாண்டர் பிளமிங் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் இன்று
படித்தார்.
பிப்ரவரி
13,1939
கரைசலில் உள்ள அமிலத்தன்மை அல்லது
காரத்தன்மையை அளந்தறிய பி.ஹெச் (PH- POTENTIAL OF HYDROGEN)முறையை
அறிமுகப்படுத்திய லாரிட்ஸ் சொரென்ஸன் இன்று காலமானார்.
பிப்ரவரி
13,1950
செய்குத் தம்பி பாவலர் மறைந்த நாள்.
முகமதியப் புலவராக இருந்து, அனைத்து சமயத் தத்துவ ஆழங்களை உணர்ந்து உரைக்கும் செறிவு கொண்டவராக செய்குத்தம்பி பாவலர் (1874-1950) விளங்கினார். கதராடையும் காந்தி குல்லாயும் அணிந்து விடுதலை உணர்வைப் பரப்பியவர்.
இசுலாமிய மித்திரன் எனும் இதழை நடத்தியவர்.
சீறாப்புராணத்துக்கு உரை எழுதியவர்.
அந்தாதிகள், கோவைகள், பாமாலை, மஞ்சரி, நீதி வெண்பா மற்றும் பல்வேறு உரைநடை நூல்களையும், ஆனந்த களிப்பு எனும் மொழிபெயர்ப்பையும், சாற்றுக் கவிகள், வாழ்த்துக்கவிகள், சிலேடைக் கவிகள், சீட்டுக் கவிகள் எனப் பன்னூறு பாக்களையும் அளித்தவர்.
பிப்ரவரி
13,1976
மத்திய அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தடை செய்யப்பட்டது.
பிப்ரவரி 13,1987
சென்னை மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.பக்தவத்சலம் மறைந்த நாள்.
விடுதலைப் போராட்டக் காலங்களில் சிறைக்கொடுமைகளுக்கும், சித்திரவதைக்கு ஆளான தேச பக்தர் இவர்.
பிப்ரவரி 13, 2014
திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா மறைந்த நாள்.
வீடு, மூன்றாம் பிறை உள்ளிட்ட பல காலம்கடந்து நிற்கும் திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வந்தவை.
இன்று
உலக வானொலி தினம்

Comments
Post a Comment
Your feedback