பிப்ரவரி
15, 1564
வானியல் வல்லுநர்
கலீலியோ கலிலி பிறந்த நாள். இத்தாலியில் பிறந்த இவர் இயற்பியலாளர், கணிதவியலாளர்,
பொறியாளர், மெய்யியலாளர் என பல துறைகளில் வியத்தகு சாதனைகள் புரிந்தவர்.
பிப்ரவரி
15, 1680
ரத்த சிவப்பணுக்களைக்
கண்டுபிடித்து விவரித்த விஞ்ஞானி ஜான்ஸ்வாம்மெர்டாம் காலமானார்.
நிணநீர் நாளங்களில் வால்வுகள் இருப்பதைக் கண்டுபிடித்தவர் இவரே. அந்த வால்வுகள் இவரது பெயரால் குறிப்பிடப்படுகின்றன. மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட பூச்சி இனங்களின் உடற்கூறு, இனப்பெருக்கம், வாழ்க்கை அட்டவணை ஆகியவற்றைப் பற்றி இவர் விவரித்துள்ளார்.
இங்கிலாந்திலிருந்து வந்திறங்கிய ரயில் என்ஜின்கள் முதன் முதலாக பம்பாயில் வண்டிகளை இழுத்து வந்ததை இன்று மக்கள் வியப்போடு பார்த்தனர்.
சூரிய அஸ்தமனம், சந்திர கிரகணம்
ஆகியவை இன்று ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.
எனியாக் (Electronic Numerical Integrator Analizer and Computer -ENIAC) என்ற முதல் தலைமுறைக் கம்ப்யூட்டர் பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
பிப்ரவரி 15,1973
பிரபல நடிகர் ஔவை டி. கே. சண்முகம்
காலமானார்.
ஔவையார் நாடகத்தில் ஔவையாராக வேடமேற்றுச்
சிறப்பாக நடித்ததால் ஔவை சண்முகம் என்று புகழ் பெற்றார்.
(அவ்வை ஷண்முகி என்ற திரைப்படம் இவர் பெயரை கொஞ்சம் மாற்றி வைக்கப்பட்டது தான்)
சங்கரதாசு சுவாமிகள் 1918-ஆம் ஆண்டில் மதுரையில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக நிறுவனத்தை உருவாக்கிய போது அந்நிறுவனத்தில் 1918-ஆம் ஆண்டில் டி. கே. சங்கரன், டி. கே. முத்துசாமி, டி. கே. சண்முகம் ஆகிய மூவரும் அவர்தம் தந்தை கண்ணுசாமிபிள்ளையால் இளம் நடிகர்களாக இணைக்கப்பட்டனர்.
பிப்ரவரி
15,1974
கவிஞரும் கதாசிரியரும் நடிகருமான
கொத்தமங்கலம் சுப்பு காலமானார்.
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத காவியங்களில் ஒன்று தில்லானா மோகனாம்பாள் திரைப்படம்.


Comments
Post a Comment
Your feedback