பிப்ரவரி
22, 1815
கார்பனின் ஒரு வடிவமே வைரம் என்று
கூறியவரும் இருடியம், ஆஸ்மியம் என்னும் இரண்டு புதிய தனிமங்களை கண்டுபிடித்தவருமான
பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்மித்சன், பிரான்ஸில் போவ்ளோகன் என்னும் இடத்தில் ஒரு
மரப்பாலத்தைக் குதிரை மீது கடக்கும்போது பாலம் முறிந்து விழுந்து நீரில் மூழ்கி
மரணமடைந்தார்.
பிப்ரவரி 22, 1857
சாரணர் இயக்கத்தை நிறுவிய பேடன் பவல் பிறந்த நாள்.
பிப்ரவரி
22, 1898
தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒரே தேதி பிப்ரவரி 22.
மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டவர் இவர். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி இவர்.
இவர் பிறந்த நாள் 22.2.1898. மறைந்த நாள் 22.2.1914.
பிப்ரவரி
22,1943
ஆன்டிபயாட்டிக் (antibiotic) என்ற
சொல்லுக்கு இன்றைய நாள் மிகுந்த தொடர்புடையது. ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில்
குடியேறிய டாக்டர் செல்மன் வேக்ஸ்மானும் அவரது குழுவினரும் இன்று தான்
Streptomycin என்னும் antibiotic மருந்தைக் கண்டுபிடித்தனர். இந்த மருந்து காச
நோய்க்குப் பெரிதும் பயன்படுத்தப்படுவதாகும். ஆன்டிபயாட்டிக் antibiotic என்ற சொல்லையும்
இவர் தான் முதல்முதலில் உருவாக்கினார்.
பிப்ரவரி
22,1944
கஸ்தூரிபா காந்தி மகா சிவராத்திரி
தினமான இன்று மாலை 7.35 க்கு சிறைச்சாலையில் காலமானார்.
இந்தியாவின் முதல் கல்வி
அமைச்சரும் சாகித்ய அகடமி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி ஆகியவையெல்லாம்
உருவாகக் காரணமாக இருந்தவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் இன்று காலமானார்.
பிப்ரவரி
22,1992
மறைந்த தலைவர்களான நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோருக்கு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பாரத
ரத்னா விருது வழங்கினார்.

Comments
Post a Comment
Your feedback