பிப்ரவரி
17, 1863
ஜெனீவாவில் இன்று பொதுமக்கள் சிலர் சேர்ந்து போரில் காயமடைந்தோர்க்கான சிகிச்சை மற்றும் நிவாரணக் குழுவை அமைத்தனர். இந்தக் குழு தான் பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது.
எனவே இந்த நாள் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்ட நாள் என்று குறிப்பிடப்படுகிறது.
பிப்ரவரி 17, 1897
ரூடால்ப் டீசல் கண்டுபிடித்த
எஞ்சின் பெட்ரோலியம் ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி முதன் முதலாக இன்று ஓட தொடங்கியது.
பிப்ரவரி 17, 1936
சிறுவர்களுக்கான புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம் மாயாவி (The Phantom) முதல் தடவையாக சித்திரக் கதைகளில் இடம்பெற்றது.
தினமணி கதிர், முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் ஆகியவற்றில் மாயாவி சித்திரக்கதைகள் வெளிவந்தன. மாயாவி சித்திரக் கதைகள் தொலைக்காட்சித் தொடராகவும் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.
பிப்ரவரி 17, 1956
தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை மறைந்த நாள்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர். திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை ஆசிரியர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர்.
12 அக்டோபர் 1891 இவர் பிறந்த நாள்.
பிப்ரவரி
17,1986
20ஆம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரும்
உலக ஆசிரியர் என்று போற்றப்படுபவருமான J.K என்று அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில்
காலமானார்.


Comments
Post a Comment
Your feedback