Skip to main content

Posts

Showing posts from November, 2021

தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம்

  தேங்கிக் கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்     தண்ணீர் செடிகளின் வேர்களுக்கடியில் வெகுநாட்கள் தேங்கி இருந்தால் செடிகள் அழுகிவிடும்.   நெல்லுக்கு நீர் தேங்கி இருக்கலாம். மற்ற பயிர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது ஆறுநாட்களுக்கு ஒருமுறை என்று முறை வைத்துத் தண்ணீர் பாய்ச்சுவது நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதற்குத் தான்.   ஒருவாரம் தொடர்ந்து மழை பெய்தால் போதும் பாதிப்பயிர்கள் அழுகிவிடுகிறது. இது எதனால் நிகழ்கிறது ?   வேருக்கடியில் தொடர்ந்து நீர் தேங்கி இருப்பதால்தான் வேர்கள் அழுகி விடுகின்றன.   ஆனால் குளம் அப்படி இல்லை.   குளத்தில் எப்போதும் நீர் தேங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் குளத்தைச் சுற்றி உள்ள இடங்கள் தணுப்பாக இருக்கும். மரங்கள் வளரும்.   தண்ணீர் இல்லாக் குளம் மானாவாரி க்  காடு போல கருவேல  மரங்கள் வளர்ந்து தன் பொலிவை இழந்து விடும். அதனால்தான் , தேங்கி க்  கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம் என்று சொல்வார்கள்.   குளத்திலே தண்ணியில்லே கொக்கு...

11th Tamil இலக்கணக் குறிப்பு

  பண்புத்தொகை   11ஆம் வகுப்புப் பாடப் பகுதியில் வரும் பண்புத்தொகை செங்கயல், வெண் சங்கு, வெண் சுவை, தீம்பால், பெரும்புகழ், தெண்டிரை, அருஞ்சமம், நல்லாடை, பேரன்பு, நெடுங்குன்று, நன்னாடு , இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு ,முந்நீர், நன்மண்   பண்புத்தொகை விளக்கம் -click here அடுக்குத்தொடர்   11ஆம் வகுப்புப் பாடப் பகுதியில் வரும் அடுக்குத்தொடர் நன்று நன்று, சுடச்சுட, உழுது உழுது , பார்த்துப் பார்த்து, நில் நில் அடுக்குத்தொடர் விளக்கம் -click here     இரட்டைக் கிளவி: 11ஆம் வகுப்புப் பாடப் பகுதியில் வரும் இரட்டைக் கிளவி:                 நெறு நெறு வினையெச்சம்   11ஆம் வகுப்புப் பாடப் பகுதியில் வரும் வினையெச்சம் தாவி,உருட்டி வினையெச்சம் விளக்கம் -click here   பெயரெச்சம்   11 ஆம் வகுப்புப் பாடப் பகுதியில் வரும் பெயரெச்சங்கள் கொண்ட, மலிந்த,  மண்டிய,பூத்த,பொலிந்த, மாண்ட, பின்னிய. பெயரெச்சம் விளக்கம் -click ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்   11 ஆம் வகுப்புப...

நான் தான் நான் தான்-தன்மேம்பாட்டுரை அணி

  தன்னைத் தானே புகழ்ந்துரைத்துக்கொண்டு ஒருவனோ ஒருத்தியோ பாடுகின்ற பாட்டில் அமைந்துள்ள அணி தன்மேம்பாட்டுரை அணி எனப்படும். இதை, 'தான் தற்புகழ்வது  தன் மேம்பாட்டுரை' என்று கூறுகிறது தண்டியலங்காரம். அசையும் பொருளில் இசையும் நானே  ஆடும் கலையின் நாயகன் நானே  எதிலும் இயங்கும் இயக்கம் நானே  என் இசை நின்றால் அடங்கும் உலகே. (கண்ணதாசன்) என்ற பாடலில் தன்னைத் தானே புகழ்ச்சியாகப் பாடிக் கொள்வதால் இந்தப் பாடலில் தன்மேம்பாட்டுரை அணி அமைந்துள்ளது. உலகம் என் புகழைப் பாடட்டுமே உயர்ந்தவன் நான் என்று சொல்லட்டுமே புலவர் என் பெருமை பேசட்டுமே  நான் இருக்கும் இடத்தில் நாடு இருக்கும்  நான் என்னும் சொல்லே நடமாடும் (கண்ணதாசன்) இந்த வரிகளையும் கவனித்துப் பாருங்கள்.  இதில் அமைந்துள்ளதும் தன்மேம்பாட்டுரை அணி தான்.

குழந்தைகள் Kahlil Gibran ...On Children

கைக்குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு இருந்த தாய் ஒருத்தி கேட்டாள்  "எங்களுக்கு குழந்தைகளைப் பற்றிக் கூறு". அவன் சொல்லத் தொடங்கினான். உங்கள் குழந்தைகள் உண்மையில் உங்களுடையவை அல்ல. வாழ்வின் தாகத்தால் தோன்றிய மகனோ மகளோ தான் அவர்கள். அவர்கள் உங்களின் வழியில் தான்  வருகிறார்கள்; உங்களிடமிருந்து அல்ல. உங்களோடு இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்லர். உங்களின் அன்பை அவர்களுக்கு கொடுக்கலாம்; ஆனால் உங்களின் எண்ணங்களை அவர்களின் மேல் திணித்து விடாதீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு என்று தனியாக சிந்தனைகள் உண்டு. குழந்தைகளின் உடல்நலத்தை நீங்கள் பாதுகாக்கலாம். ஆனால் அவர்களின் ஆன்மாவை  அல்ல. ஏனென்றால் அவர்களின் ஆன்மா எதிர்காலத்தில் வாசம் செய்கிறது. அவர்களின் வருங்காலத்தை கற்பனையில் காணவோ  அவர்களின் கனவுகளுக்குள் காலடி எடுத்து வைக்கவோ உங்களால் முடியாது. அவர்களைப் போல் நீங்கள் இருக்க முயற்சிக்கலாம்.  ஆனால் உங்களைப் போலவே அவர்களை ஆக்கிவிட முயலாதீர்கள். ஏனென்றால் வாழ்வு என்றும் பின்னோக்கிப் பாய்வதில்லையே.   அது இறந்த காலத்தோடு இருந்து விடுவதுமில்லை. பாயக் காத்திரு...

வாணிபம்..Kahlil Gibran...

 வணிகன் ஒருவன் வாணிபம் பற்றிக் கூறு என்றான். அவன் தொடர்ந்தான். வள்ளல் தன்மை மிகுந்த இந்த மண் உங்களுக்கு கொட்டிக் கொடுக்கிறது. அதை அள்ளி எடுத்து அடுத்தவர்களுக்குக் கொடுப்பதால் அது அபரிமிதமாவதோடு ஆன்மாவும் மகிழ்கிறது.  அன்பற்ற பேரம் சிலரைப் பேராசைக்கும் பலரைப் பசியின் எல்லைக்கும் தள்ளிவிடும். மீன் பிடிப்பவர்களும் பழரசம் பிழிபவர்களும் துணி நெய்பவர்களும் வாசனை வியாபாரிகளும் சந்தையில் கூடுகிற போது உங்கள் தராசுகளில் அந்த நியாய தேவன் குடியிருக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். வார்த்தைகளை வைத்து வாணிபம் செய்பவர்களை அங்கே அனுமதிக்காதீர்கள். அவர்களிடம் கூறுங்கள்;  நிலத்திற்கும் கடலுக்கும் எங்கள் மீது உள்ள கருணை போலவே உங்கள் மீதும் உள்ளது!  அது எங்களோடு வந்து பாடுபட்டால் உனக்கும் வேண்டியதை அள்ளித்தரும். சந்தைக்கு வருகின்ற பாடகர்களும் நடனக்காரர்களைப் போல அங்குமிங்கும் அலைபவர்களும் கனவுகளில் கூடு கட்டி நனவுகளில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள்.  அவர்களும் கொடுத்துப் பெறட்டும். சந்தையை விட்டு அகன்று செல்கின்ற போது யாரும் வெறுமனே இல்லம் திரும்பாது பார்த்துக் கொள்ளுங்...

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

  இருபெயரொட்டுப்    பண்புத்தொகை பண்புத்தொகையில்   ஒரு     வகை இருபெயரொட்டுப்   பண்புத்   தொகை .     பலாமரம்    என்ற   சொல்லில்,   பலா   என்பது   சிறப்புப்   பெயர் .     மரம்   என்பது   பொதுப்பெயர் .     வெள்ளைத்   தாமரை    என்ற   சொல்லில்   தாமரை   என்பது   பொதுப்பெயர் .  வெள்ளை   என்பது   சிறப்புப்   பெயர் .   பொதுப்பெயரோடு   சிறப்புப்பெயரோ    சிறப்புப்   பெயரோடு   பொதுப்   பெயரோ   சேர்ந்து   ஒரு   பொருளை   உணர்த்த   வரும்   சொல்லை   இருபெயரொட்டுப்   பண்புத்தொகை    என்கிறோம் .   இரண்டு   சொற்களுக்கும்   இடையில்    ஆகிய   என்னும்   உருபு   தொக்கி   நிற்கும் .         சாரைப்பாம்பு,       தென்னைமரம்,         தாமரைப்பூ,  ...