ஆகஸ்ட் 30, 1659
ஷாஜகானின் மூத்த மகனும் பகவத் கீதையை சமஸ்கிருதத்திலிருந்து பெர்ஷிய மொழியில் மொழிபெயர்த்தவருமான தாரா ஷிக்கோவை அரியணைப் போட்டியின் காரணமாக சொந்த சகோதரன் ஔரங்கசீப் இன்று கொன்றான்.
மறுநாள் தலையற்ற தாராவின் உடலை யானையின் மீது ஏற்றி தில்லி தெருக்களில் ஊர்வலம் விட்டு மகிழ்ந்தான் ஔரங்கசீப்.
ஆகஸ்ட் 30, 1871
அணு இயற்பியலில் முக்கியமான பங்காற்றிய ரூதர் ஃபோர்ட் (Ernest Rutherford) இன்று நியூசிலாந்தில் பிறந்தார்.
ஆகஸ்ட் 30, 1875
நல்லூர் ஞானப்பிரகாசர் பிறந்த நாள்.
நல்லூர் ஞானப்பிரகாசர் ஒரு பன்மொழிப் புலவர். இலத்தின், கிரேக்கம் உட்பட பதினெட்டு மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார்.
தமிழின் தொன்மையை உலக அறிஞர்கள் அறிய இவர் எழுத்தும் ஒரு காரணம். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி ஒரு சிறந்த நூலாகும்.
ஜனவரி 22, 1947 இவர் மறைந்த நாள்.
ஆகஸ்ட் 30, 1957
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மறைந்த நாள்.
நாகர்கோயிலில் நவம்பர் 29, 1908 - அன்று பிறந்தவர்.பெற்றோர் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள்.
நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தமிழ் நாடக உலகிலும் திரைப்பட உலகிலும் நகைச்சுவையால் தனி முத்திரை பதித்தவர்.
இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பாடகரும் ஆவார்.
சதி லீலாவதி இவரது முதல் திரைப்படம்.
ஆகஸ்ட் 30, 1971

Comments
Post a Comment
Your feedback