ஆகஸ்ட் 19, 1662
மருத்துவர்கள் ஊசி போடப் பயன்படும் இன்ஜெக்க்ஷன் சிரிஞ்சு, மெக்கானிக்கல் கால்குலேட்டர் போன்றவற்றை மட்டுமல்லாமல் பாஸ்கல் விதியையும் கண்டுபிடித்த பாஸ்கல் (Blaise Pascal) பிரான்சில் இன்று காலமானார்.
ஆகஸ்ட் 19, 1871
தன் சகோதரரோடு சேர்ந்து ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த Orville Wright அமெரிக்காவில் இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 19, 1887
தீரர் சத்தியமூர்த்தி பிறந்த நாள்.
ஆகஸ்ட் 19, 1950
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர், தலை சிறந்த பொறியாளர், புகழ் பெற்ற எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட சுதா மூர்த்தியின் பிறந்த நாள்.
ஆகஸ்ட் 19, 1960
ஸ்புட்னிக் 5 என்ற ரஷ்ய விண்கலம் மூலமாக விண்வெளிக்கு இரண்டு நாய்கள் அனுப்பப்பட்டன. Belka மற்றும் Strelka என்ற அந்த இரண்டு நாய்களும் விண்வெளியில் பயணித்த முதல் விலங்குகள் என்ற பெருமையைப் பெற்றன. மறுநாள் அவை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி வந்தன.
Comments
Post a Comment
Your feedback