கார் மழை பெய்து மண் மணக்கிறது.
மண் வாசம் போல மழை நீரும் எங்கும் நிறைந்திருக்கிறது.
அங்கே இங்கே நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு அந்தப் பசு புல் மேய்ந்து கொண்டிருக்கிறது.
அவ்வளவு புல் அந்த நிலத்தில்...
அப்படிப் புல் மேய்ந்த அந்தப் பசு குடம் குடமாக பால் தருவதில் என்ன அதிசயம்.
அங்கே ஒரு காளைமாடு அது வழியில் அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
மேய்ந்து கொண்டிருக்கும் பசு மாடு வேண்டுமென்றே அந்தக் காளையை முட்டப் போகிறது.
இளம் காளை பூட்டப்பட்ட தேர் போல
இளமையும் வனப்பும் சேர அங்கே வருகிறாள் ஒரு பெண்.
பெரிய ஊர் , சின்ன ஊர் என்ற பேதமில்லாமல் வழியெல்லாம் அவள் அழகால் அனைவரையும் கவனிக்க வைக்கிறாள் அந்தப் பெண்.
மோர் விற்றுக் கொண்டு போகும் அந்தப் பெண் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் போய்க் கொண்டே இருக்கிறாள்.
கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்
பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும்,
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இளம் பாண்டில்
தேர் ஊர, செம்மாந்தது போல், மதைஇனள்
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்,
மோரோடு வந்தாள் தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு.
(கலித்தொகை)
Comments
Post a Comment
Your feedback