ஆகஸ்ட் 26, 1883
திரு.வி.க. பிறந்த நாள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாக இன்று திரு.வி.க. பிறந்தார்.
பெரிய புராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் எழுதியவர் அவர். யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை மீது கொண்டிருந்த பற்றால், கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற நூலை எழுதினார்.
பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு, தேச பக்தாமிர்தம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் திறம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, உள்ளொளி உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை வழங்கியவர்.
சிறந்த மேடைப் பேச்சாளரான திரு.வி.க. தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.
ஆசிரியராக, அரசியல்வாதியாக, இலக்கிய ஆர்வலராக, மேடைப் பேச்சாளராக வாழ்ந்தவர் இவர்.
ஆகஸ்ட் 26, 1910
அல்பேனியா நாட்டைச் சேர்ந்த ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற ரோமன் கத்தோலிக்கப் பெண்ணாக இந்தியாவில் நுழைந்து கல்கத்தாவில் ஆதரவற்றோருக்கான இல்லம் அமைத்த தெரசா அம்மையார் பிறந்த நாள் இன்று.
Comments
Post a Comment
Your feedback