ஆகஸ்ட் 31, 1688
பில்கிரீம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலின் மூலம் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான் பனியன் லண்டன் நகரில் இன்று காலமானார்.
ஓட்டை உடைசல் பழுது பார்க்கும் தொழிலாளியின் மகனான இவர் ஓரளவே எழுதப் படிக்கத் தெரிந்தவர். தன் தந்தையின் தொழிலையே செய்து வந்தார். மத நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதால் அதுவே அவருக்கு மனச்சிதைவை உருவாக்கியது.
மதத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான ஈடுபாடு மற்றவர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது. பலமுறை எச்சரிக்கப்படும் மற்றவர்களைத் தொந்தரவு செய்யும் அவரது போக்கு மாறாததால் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. சிறையிலும் மத சம்பந்தமான சில நூல்களை எழுதினார். தண்டனை முடிந்து விடுதலையான பின் மீண்டும் முன்பு போலவே பிறழ்வாக நடந்து கொண்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அவர் எழுதியது தான் பில்கிரீம்ஸ் புரோகிரஸ். அது தான் உலகப் புகழ் பெற்ற நூலாக விளங்குகிறது. அதைத் தழுவி தமிழில் ஒரு நூல் எழுதப்பட்டது. அதன் பெயர் இரட்சணிய யாத்ரிகம்.
ஆகஸ்ட் 31, 1909
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஹீமோதெரபி இன்று முதன்முதலாக ஒரு எலிக்குத் தரப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
நோய் பாதிக்கப்பட்ட அந்த எலிக்கு ஊசி மூலமாக preparation 606 செலுத்தப்பட்டது.
நோயை குணப்படுத்த முடியும் என்று நிரூபித்த பின்பு இந்த preparation 606 மருந்துக்கு ஹீமோதெரபி என்ற பெயரை அதைக் கண்டுபிடித்த Paul Ehrlinch சூட்டினார்.
ஆகஸ்ட் 31, 1919
ஆபிரஹாம் பண்டிதர் மறைந்த நாள்.
1859 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்த ஆபிரகாம் பண்டிதர் இசைப்பேரறிஞராகத் திகழ்ந்தவர்.
கர்நாடக இசையுலகின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், முத்துச்சாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் இயற்றிய கீர்த்தனங்களும் வர்ணங்களும் அப்போதெல்லாம் தெலுங்கிலும் வடமொழியிலும் பாடப்பெற்று வந்தன. இவற்றுக்கு ஆபிரகாம் பண்டிதர் தமிழில் பாடல்களை எழுதி அவற்றுக்குத் தாமே இசையமைத்தார். மொத்தம் 96 பாடல்களை இவர் எழுதினார்.
சுவாமி விபுலானந்தர் 'யாழ் நூல்' எழுதுவதற்கு இவரது, 'கருணாமிர்த சாகரம்' நூல் காரணமாக அமைந்தது.
ஆகஸ்ட் 31, 1971
இங்கிலாந்தில் நடந்த ஒரு பொருட்காட்சியில் பிலிப்ஸ் நிறுவனத்தால் உலகின் முதல் வீடியோ கேசட் ரெக்கார்டர் (VCR) காட்சிப்படுத்தப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback