ஆகஸ்ட் 2, 1820
வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது என்பதை முதன் முதலாக செயல் விளக்கமாக செய்து காட்டிய John Tyndal அயர்லாந்து நாட்டில் இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 2, 1858
இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
ஆகஸ்ட் 2, 1859
ஆபிரஹாம் பண்டிதர் பிறந்த நாள்.
1859 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்த ஆபிரகாம் பண்டிதர் இசைப்பேரறிஞராகத் திகழ்ந்தவர்.
கர்நாடக இசையுலகின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், முத்துச்சாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் இயற்றிய கீர்த்தனங்களும் வர்ணங்களும் தெலுங்கிலும் வடமொழியிலும் பாடப்பெற்று வந்தன. இவற்றுக்கு ஆபிரகாம் பண்டிதர் தமிழில் பாடல்களை எழுதி அவற்றுக்குத் தாமே இசையமைத்தார். மொத்தம் 96 பாடல்களை இவர் எழுதினார்.
சுவாமி விபுலானந்தர் 'யாழ் நூல்' எழுதுவதற்கு இவரது, 'கருணாமிர்த சாகரம்' நூல் காரணமாக அமைந்தது.
ஆகஸ்ட் 2, 1876
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கைய்யா பிறந்த நாள்.
ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான இவர் மற்ற தன்னலம் கருதாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் போலவே வறுமையில் வாடியவர்.
1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் நாள் இவர் மறைந்தார்.
ஆகஸ்ட் 2, 1913
இலங்கைத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 2, 1922
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் மறைந்த தினம்.
ஆகஸ்ட் 2, 1934
ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலர் ஆனார்.
ஆகஸ்ட் 2,1943
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். அந்தப் போரில் ஈடுபட்டிருந்த ஒரு அமெரிக்கப் படகு ஜப்பான் கடற்படையினரின் தாக்குதல் காரணமாக இன்று மூழ்கடிக்கப்பட்டது. மூழ்கடிக்கப்பட்ட அந்தப் படகில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஜான்.எஃப்.கென்னடி தான் பின்னாளில் அமெரிக்க அதிபரானார்.
Comments
Post a Comment
Your feedback