ஆகஸ்ட் 18, 1892
தி.வை.சதாசிவ பண்டாரத்தார் பிறந்த தினம்.
தமது ஆயுட்காலம் முழுவதையும் தமிழ்ப்பணிக்கே அர்ப்பணித்துப் புகழ் பெற்றவர் தமிழறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.
இவர் இயற்றிய 'முதற்குலோத்துங்க சோழன்', 'பாண்டியர் வரலாறு', 'திருப்புறம்பியத் தல வரலாறு', 'காவிரிப்பூம்பட்டினம்' ஆகிய வரலாற்று நூல்கள் குறிப்பிடத்தக்க சிறப்பான நூல்கள். 'சிதம்பர விநாயகர் மாலை' எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது.
ஆகஸ்ட் 18, 1945
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைந்ததாகக் கருதப்படுகின்ற நாள்.
ஆகஸ்ட் 18, 1951
இந்தியாவின் முதல் ஐஐடி (IIT) இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூரில் தொடங்கப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback