செப்டம்பர் 1,1604
சீக்கியர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஆதி கிரந்த் இன்று தான் பொற்கோவிலில் வைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த ஆங்கிலேய படைத்தளபதி மேஜர் பானர் மேன் செப்டம்பர் 4ஆம் தேதி தன்னை பாளையங்கோட்டையில் வந்து சந்திக்கும்படி கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பிய நாள்.
செப்டம்பர் 1 1859:
சிகாகோ ரயில் பாதையில் தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டியில் முதன் முதலில் கழிப்பறை வசதி செய்யப்பட்டது.
செப்டம்பர் 1 1877:
தமிழறிஞர் அ. வரதநஞ்சைய பிள்ளை பிறந்த தினம்.
செப்டம்பர் 1 1895:
கர்நாடக இசைக் கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம்.
செப்டம்பர் 1 1896::
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை உலகம் முழுதும் தோற்றுவித்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா பிறந்த தினம்.
செப்டம்பர் 1 1928:
முதல் கார்ட்டூன் பேசும் படம் நியூயார்க்கில் திரையிடப்பட்டது. ஈசாப்பின் டின்னர் டைம் என்னும் நீதி கதை இது.
செப்டம்பர் 1 1939:
கடுமையான ஊனமான மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட ஜெர்மனி மக்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரும் திட்டத்திற்கு ஹிட்லர் இன்று ஒப்புதல் அளித்தார்.
செப்டம்பர் 1 1942:
இந்திய தேசிய ராணுவம் ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 1 1947:
அகில இந்திய நேரம் என்று இந்தியா முழுவதும் பின்பற்றக்கூடிய இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் (IST) இன்று தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
செப்டம்பர் 1 1956:
சனிக்கிழமை அன்று லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(LIC) ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர்1,1980:
இலங்கைத் தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் மறைந்த நாள்.
செப்டம்பர் 1,1985:
அட்லாண்டிக் கடலில் மூழ்கி போன டைட்டானிக் கப்பல் முதல் முறையாக தொலையுணர்கருவி மூலமாக புகைப்படம் எடுக்கப்பட்டது. டைட்டானிக் 1912 ஆம் ஆண்டு புறப்பட்டு புறப்பட்ட அன்றே பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது.







Comments
Post a Comment
Your feedback