ஆகஸ்ட் 6, 1881
நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 6, 1890
முதன் முதலாக மின்சாரத்தைப் பாய்ச்சி வில்லியம் கெம்மியர் என்ற கொலைக் குற்றவாளிக்கு நியூயார்க்கில் மரணதண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 6, 1925
விடுதலைப் போராட்ட வீரர் சுரேந்திரநாத் பானர்ஜி மறைந்த தினம்.
ஆகஸ்ட் 6, 1926
கெர்ட்ரூட் எடெர்ல் என்ற பெண்மணி ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
ஆகஸ்ட் 6,1945
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது காலை 8.15க்கு அமெரிக்கா இன்று "லிட்டில் பாய்" என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது.
கிட்டத்தட்ட 80,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று மறைந்தார்.

Comments
Post a Comment
Your feedback