ஆகஸ்ட் 9,1892
ஒரே நேரத்தில் செய்தி அனுப்பவும் செய்தியைப் பெறவும் என இரு வழியில் செயல்படும் இருவழி தந்திக்கான காப்புரிமம் இன்று தாமஸ் ஆல்வா எடிசனுக்கு வழங்கப்பட்டது .
ஆகஸ்ட் 9,1897
விடுதலைப் போராட்ட வீரர் ஈ.கிருஷ்ண ஐயர் பிறந்த தினம்.
ஆகஸ்ட் 9,1910
மின்சாரத்தால் இயங்கும் வாஷிங் மெஷின் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக ஆல்வா பிஷர் என்ற அமெரிக்க விஞ்ஞானிக்கு இன்று காப்புரிமம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 9,1941
தமிழறிஞர் க. ப. அறவாணன் பிறந்த நாள்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.
23 டிசம்பர் 2018 இவர் மறைந்த நாள். இவருடைய மறைவுக்குப் பிறகு இவர் விட்டுச்சென்ற பதிப்பக மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளை இவருடைய துணைவியார் தாயம்மாள் அறவாணன் தொடர்ந்து வருகிறார்.
ஆகஸ்ட் 9,1945
ஜப்பானின் நாகசாகி நகர் மீது அமெரிக்கா பேட் மேன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியதில் 35,000 பேர் கொல்லப்பட்டனர். இது நாள் வரையிலும் இதுதான் அணுகுண்டு போரில் பயன்படுத்தப்பட்ட கடைசி நிகழ்வாகும்.
ஆகஸ்ட் 9,1965
மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய சிங்கப்பூர் இன்று தனிநாடானது.
ஆகஸ்ட் 9,1974
வாட்டர்கேட் ஊழல் காரணமாக அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.
ஆகஸ்ட் 9,2016
தமிழ்த் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், கவிஞர் பஞ்சு அருணாசலம் மறைந்த நாள்.
ஆகஸ்ட் 9,2023
தமிழகக் கல்வெட்டறிஞர் செ. இராசு மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback