ஆகஸ்ட் 5,1914
முதலாவது மின்சார போக்குவரத்து சிக்னல் லைட் அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் இன்று தான் நிறுவப்பட்டது.
ஆகஸ்ட் 5,1927
நகைச்சுவை நடிகரும் பாடகருமான சந்திரபாபு இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 5,1930
நிலவில் முதன் முதலில் காலடி வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 5,1962
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா இன்று கைது செய்யப்பட்டார்.
இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் 1990-ஆம் ஆண்டு தான் விடுவிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 5,1962
அப்போதைய உலகப்புகழ் பெற்ற அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சலசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஆகஸ்ட் 5,1965
இந்தியா-பாகிஸ்தான் போர் இன்று ஆரம்பமானது.
எல்லைக் கோட்டைத் தாண்டி பொது மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் பாகிஸ்தான் படையினர் புகுந்ததைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக யுத்தம் தொடங்கியது.
ஆகஸ்ட் 5,1971
தமிழக நாடக நடிகராக இருந்து திரைப்பட நடிகராகவும் பாடகராகவும் புகழ் பெற்ற கே. ஆர். ராமசாமி மறைந்தார்.
ஆகஸ்ட் 5, 2019
ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உருவான நாள்.
Comments
Post a Comment
Your feedback