ஆகஸ்ட் 24,1891
தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
ஆகஸ்ட் 24,1906
எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 24,1927
நடிகை அஞ்சலிதேவி இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 24,1929
பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 24,1961
விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை மறைந்த நாள்.
ஆகஸ்ட் 24,1972
நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை மறைந்த நாள்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தெய்வ பக்தியும் தேச பக்தியும் நிறைந்தவர். காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்டவர்.
''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது...
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்''
என்று பாடிய உப்புச்சத்தியாகிரக வழிநடைப் பாடல் மூலம் எல்லோருக்கும் அறிமுகமானவர்.
'தமிழன் என்றோர் இனமுண்டு,
தனியே அவர்க்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்,
அன்பே அவனுடை வழியாகும்'' என்று பாடியவர்.
ஆகஸ்ட் 24,1986
ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார் மறைந்த நாள்.
ஆகஸ்ட் 24,1991
உக்ரைன் இன்று சோவியத் யூனியனிலிருந்து விலகி தனி நாடானது.
ஆகஸ்ட் 24,1995
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 24,2006
புளூட்டோ ஒரு கோள் அல்லவெனவும் அது ஒரு குறுங்கோள் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது. இது வரை சூரியனுக்கு ஒன்பது கோள்கள் என்று நம்பிக்கொண்டிருந்ததை மாற்றி, எட்டுக் கோள்கள் தான் என்று உலகம் முழுதும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆகஸ்ட் 24,2014
காந்தி திரைப்படத்தின் மூலம் இந்திய மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஆங்கில நடிகர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இன்று காலமானார்.
Comments
Post a Comment
Your feedback