மார்ச் 9, 1851
மின்காந்தத்தைப் பற்றிக் கண்டுபிடித்து உறுதிப்படுத்திய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓர்ஸ்டேட் என்னும் டென்மார்க் அறிவியலாளர் காலமானார். அதுவரை மின் விசையும் காந்த விசையும் தனித்தனியான விசைகள் என்ற கூலும்பின் கருத்தே இயற்பியலில் நிலவி வந்தது.
மார்ச் 9, 1876
அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் தொலைபேசி செய்வதற்கான காப்புரிமை பெற்றார்.
மார்ச் 9, 1951
தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் ஹூசைன் பிறந்த நாள்.
மார்ச் 9, 1954
பின்னணிப் பாடகர் டி. எல். மகாராஜன் பிறந்த நாள்.
இவரின் தந்தை திருச்சி லோகநாதனும் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் தான்.
மார்ச் 9, 1988
திரைப்பட இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாஸ் லட்சத் தீவில் காலமானார்.
மார்ச் 9, 2003
தமிழ்மொழி தமிழிசை இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றிருந்த முனைவர் வீ. ப. கா. சுந்தரம் மறைந்த நாள்.
தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்ற இவரது நூல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment
Your feedback