மார்ச்
27, 1899
வானொலி ஒலிபரப்பு
மார்க்கோனியால் முதன்முதலாக உலக அளவில் சோதித்துப் பார்க்கப்பட்டது.
இங்கிலீஷ் கால்வாய்க்கு மறுகரையில் சுமார் 52 கிலோமீட்டர் தூரம் வரை மோர்ஸ்
சிக்னல் ஒலிபரப்பப்பட்டது.
மார்ச் 27, 1892
உரைநடைக் கவிதை எழுதி உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பெருங்கவிஞர் வால்ட் விட்மன் இன்று காலமானார். புல்லின் இதழ்கள் (Leaves of Grass) என்னும் இவரது கவிதை அமெரிக்கக் கவிதை உலகில் புதிய திருப்பத்தை உண்டு பண்ணியது. இந்தியா செல்லும் வழி (Passage to India) இவரது புகழை உயர்த்தியது.
மார்ச் 27, 1892
சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள்.
மார்ச்
27, 1968
விண்வெளியில்
பறந்த முதல் ரஷ்ய விண்வெளி வீரர் கர்னல் யூரி கஹாரினும் மற்றொரு விண்வெளி வீரர்
கர்னல் விளடிமிர் செரியோஜினும் விமான விபத்தில் மாண்டனர்.
ககாரின் விண்ணில் பயணித்த நாளான 1961 ஏப்ரல் 12 அன்று சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் இருந்தார்.
இந்த நாள் மனித சமுதாயம் பூமிக்கு வெளியே தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடங்கிய நாள்.
2001 ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ம் தேதி யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. இது யூரியின் சாதனையை எப்போதும் நினைவுபடுத்தும்.
Comments
Post a Comment
Your feedback