மார்ச்
25, 1949
கம்யூனிஸ்ட்
சீனாவின் தலைநகராக பீகிங் அறிவிக்கப்பட்டது மாசேதுங் தனது தலைமைச் செயலகத்தை அங்கு
அமைத்துக் கொண்டார்.
மார்ச் 25, 1953
ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அந்த நாட்களில் சென்னை ஆந்திராவின் தலைநகராக ஆகிவிடக்கூடும் என்ற நிலை இருந்தது. இந்தப் பிரகடனம் சென்னை தமிழகத்தோடு தான் இருக்கும் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்பதை உறுதி செய்தது.
மார்ச் 25, 1969
பாகிஸ்தான்
ஜனாதிபதி அயுப்கான் பதவி விலகினார். ராணுவ தலைமை தளபதி யாக்யாகான் ஆட்சிப்
பொறுப்பை ஏற்றுக்கொண்டு ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார்.
மார்ச் 25, 1971
கிழக்கு
பாகிஸ்தானில் சுயாட்சி கோரி நடத்திய இயக்கத்தை நசுக்க ஜனாதிபதி யாக்யாகான்
விமானப்படை, டாங்கிப் படைகளை அனுப்பினார். ஏறக்குறைய 10 லட்சம் கிழக்கு
பாகிஸ்தானியர் மற்றும் வங்காளிகள் இந்தப் போரில் கொல்லப்பட்டனர். அதற்குப்
பின்பு ஒரு கோடிப் பேர் இந்தியாவிற்குள் அகதிகளாக ஓடி வந்தனர்.
ஸ்ரீரங்கம் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.
235 அடி உயரமுள்ள இந்த ராஜகோபுரம் 13
அடுக்குகள் கொண்டது. ஒரு கோடி செலவில் கட்டப்பட்ட இக்கோபுரம் ஆசியாவிலேயே உயரமான
கோபுரமாகும்.

Comments
Post a Comment
Your feedback