மார்ச்
30, 1692
வேளாண்துறையில் கால்நடை வளர்ப்பும் வாணிபமும் என்ற பெயரில் முதல் பத்திரிக்கை வெளிவந்தது.
மார்ச் 30, 1709
தான் எழுதிய தொடர்ச்சியான நாட்குறிப்பு மூலம் ஒரு வரலாற்று ஆவணத்தை வழங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம்.
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெ னியின் அலுவலராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். 1736 செப்டம்பர் 6 முதல் 1761 ஜனவரி 11 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இடைவிடாமல் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடி என்று சாமுவேல் பெப்பீசு என்பவரைச் சொல்கிறார்கள்.
பெப்பீசு எழுதிய காலத்தை விட அதிகமான காலம் எழுதியதோடு அதை ஒரு வரலாற்று ஆவணம் போல வழங்கியதில் சாமுவேல் பெப்பீசு எழுதியதை விட இவரது நாட்குறிப்பு சிறப்பானது.
இந்தியாவின் பெப்பீசு என்பது இவருக்கு வழங்கப்படும் அடைமொழி.
இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. இன்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
மார்ச்
30, 1842
ஒரு மாணவனின் கழுத்தில் ஏற்பட்டிருந்த சீழ்க் கட்டியை முதன் முதலாக மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தினார் ஜெபர்ஷனைச் டாக்டர் கிராபோர்ட் லாங்க். இப்படி மயக்க மருந்து கொடுத்து ஒன்பது அறுவை சிகிச்சைகளை அவர் செய்தார். ஆனால் அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் இவரை சூனியக்காரர் என்று குற்றம் சாட்டி மேலும் இத்தகைய சிகிச்சைகளைச் செய்தால் அவரைக் கொன்று விடுவதாக பயமுறுத்தவே அவர் இந்த சிகிச்சை முறையைக் கைவிட்டுவிட்டார்.
மார்ச்
30 ,1858
பென்சிலுடன் ரப்பரைப் பொருத்தி பென்சில் தயாரிப்பதற்கு பிலடெல்பியாவைச் சேர்ந்த ஹைமன் லிப்மன் என்பவர் காப்புரிமை பெற்றார்.
மார்ச் 30 ,1861
ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரோடு சமகாலத்தில் துறவறம் பெற்றவருமான சுவாமி யோகானந்தர் பிறந்த நாள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஈசுவர கோடிகள் என்று அடையாளம் காட்டிய ஆறு இளைஞர்களுள் சுவாமி யோகானந்தரும் ஒருவர்.
சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி கல்கத்தாவில் ராமகிருஷ்ண மிஷனைத் தொடங்கியபோது துணைத் தலைவராக இவரைத் தேர்ந்தெடுத்தார்.
மார்ச் 30 ,1908
இந்தியாவில் திரைப்படத் துறையில் சேவை செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டபோது அந்த விருதை முதல் முதலாகப் பெற்றவர் நடிகை தேவிகா ராணி சௌத்திரி ரோரிக். இன்று அவர் பிறந்த நாள்.
மார்ச்
30, 1953
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மின்காந்தத் திசை, ஈர்ப்பு திசை, சார்பியல் கொள்கை ஆகியவற்றை இணைக்கும் Unified field theory என்ற தேற்றத்துக்கான கணக்கியல் சமன்பாட்டை அறிவித்தார்.
மார்ச்
30, 1954
ராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து காமராஜர் சட்டசபை காங்கிரஸ் தலைவராகத் தேர்வானார்.
மார்ச்
30, 1984
கவிஞரும் இந்தியாவிலேயே முதன் முதலாக கலைக் களஞ்சியம் உருவாக்கியருமான பெரியசாமி தூரன் காலமானார்.
மார்ச் 30, 2005
மலையாள மொழி எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவரான ஒ. வி. விஜயன் மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback