மார்ச் 11, 1898
சுவாமி சிவானந்தர் பிறந்த நாள்.
திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையைப் பார்க்கும்போதெல்லாம் சுவாமி சிவானந்தரின் நினைவு வருவது இயற்கை.
அவர் அமைத்தது தான் அந்தத் தபோவனம்.
இவர் தன் தொடக்கக் கல்வியை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியை சீனியர் கேம்பிரிட்ஜிலும் தொடங்கி மிகுந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றார்.
1920 முதல் 1923 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். மயிலை ராமகிருஷ்ண மடத்துக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது அங்கே மடத்தின் தலைவராக இருந்த சுவாமி பிரம்மானந்தரின் தொடர்பு ஏற்பட்டது.அதன் வழியே பேலூர் ஆசிரமம் சென்றார். 1926 இல் ஊட்டியில் முழுத் துறவு பெற்றார்.
ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் ஆன்மீக நெறியைக் கொண்டு தனது ஞான மார்க்கத்தை அமைத்துக் கொண்டவர் இவர். திருப்பராய்த்துறையில் தபோவனத்தையும் கல்விச் சாலையையும் நிறுவினார். படிப்பது மனனம் செய்வது மதிப்பின் பெறுவது என்பது மட்டுமே கல்வி அல்ல முழுமையான மன வளர்ச்சியை கொடுப்பது மட்டுமே கல்வியின் நோக்கம் என்பதை உணர்த்திக் காட்டினார். பள்ளிப் பாடத்தில், கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்தார். உடல் வலிமையும் ஒரு கல்விதான் என்று கருதி உடலை காக்கவும் பாடத்திட்டத்திற்குள் ஏற்பாடு செய்தார்.
ராமகிருஷ்ண விஜயம் என்ற இதழின் ஆசிரியராக இருந்ததோடு 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது உரையோடு வெளிவந்துள்ள கீதையும் திருவாசகமும் ஒரு அறிவுக் களஞ்சியம்.
இவர் பொள்ளாச்சி அருகேயுள்ள செங்குட்டைப்பாளையம் என்னும் ஊரில் பி. கே. பெரியண்ண கவுண்டர், நஞ்சம்மையார் ஆகியோருக்கு மகனாக இன்று தான் பிறந்தார். சின்னுக் கவுண்டர் என்பது அவருடைய இயற்பெயர்.
மார்ச் 11, 1912
கோவை பீளமேட்டில் பிறந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் என். ஜி. ராமசாமி பிறந்த நாள்.
மார்ச் 11, 1927
புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் வி. சாந்தா பிறந்த நாள். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் பத்மஸ்ரீ , பத்ம விபூஷன் போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்ற பெருமை கொண்டவர் இவர்.
மார்ச் 11, 1948
விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட முதல் இந்திய கப்பல் ஜல உஷா இன்று மிதக்க விடப்பட்டது.
மார்ச் 11, 1955
பெனிசிலினை பெனிசிலியம் என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்த அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் இன்று மறைந்தார்.
மார்ச் 11, 1992
சென்னையில் கடற்படை ராஜோலி விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback