ஏப்ரல் 1, 1578
மனிதர் உடலில் ரத்தம் வட்டப்பாதையில் சுற்றுகிறது என்றும் மனித இதயம் நிமிடத்திற்கு சுமார் 72 முறை துடிக்கிறது என்றும் கண்டுபிடித்த வில்லியம் ஹார்வி பிறந்தநாள் இன்று.
ஏப்ரல் 1, 1872செல்கருவைச் சுற்றியுள்ள கூழ்மப் பொருளுக்கு புரோட்டோ பிளாசம் என்று பெயர் சூட்டிய ஜெர்மனி தாவரவியல் விஞ்ஞானி கியூகோ வான் இன்று காலமானார்.
செல் பிரிதல் மூலமாகவே புதிய செல்கள் தோன்றுகின்றன என்று கூறியவரும் இவரே.ஏப்ரல் 1, 1889
HINDU என்னும் ஆங்கிலப் பத்திரிக்கை நாளிதழாக இன்று வெளிவரத் தொடங்கியது.
ஏப்ரல் 1, 1904
ஹென்றி ராய்ஸ் என்பவர் இரண்டு சிலிண்டர் காரை தயாரித்து மான்செஸ்டரில் வெள்ளோட்டம் விட்டார். இந்தக் காரை விற்பனை செய்வதற்கான உரிமையை சார்லஸ் ஸ்டூவர்ட் ரோல்ஸ் என்பவர் எடுத்தார். இந்தக் கார் ரோல்ஸ் ராய்ஸ் என்று பெயரில் விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 1931
சென்னையில் பீச் ஸ்டேஷன் தாம்பரம் மின்சார ரயில் வண்டி வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
ஏப்ரல் 1, 1933
இந்திய விமானப்படை ஆறு அதிகாரிகளுடனும் ஒன்பது வீரர்களுடனும் மிகப் பழைய நான்கு வாபிதி ரக விமானங்களுடன் கராச்சியில் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 1935
பீகாரில் இருந்து பிரிந்து ஒரிசா தனி மாநிலமாக அமைக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 1935
இந்திய ரிசர்வ் வங்கி இன்று நிறுவப்பட்டது.
ஏப்ரல் 1, 1943
ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற பெயரில் தனியார் துறையில் 1881 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த தொலைபேசி நிறுவனம் இன்று அரசுடமையாக்கப்பட்டு இந்தியன் டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது.
ஏப்ரல் 1, 1957
கல்விப் பணிக்காக வாரி வழங்கிய வள்ளல் டாக்டர் அழகப்பா செட்டியார் காலமானார்.
ஏப்ரல் 1, 1976
வானொலியில் இருந்து தூர்தர்ஷன் என்னும் தொலைக்காட்சி தனி அமைப்பாகப் பிரிக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 1977
திரைப்பட இயக்குனரும் திரைக்கதை வசனகர்த்தாவுமான ஏ.பி.நாகராஜன் காலமானார்.
ஏப்ரல் 1, 1979
ஈரான் இஸ்லாமிய குடியரசாக பிரகடனப்படுத்திக் கொண்டது.
ஏப்ரல் 1, 1986
ஸ்பீட் போஸ்ட் இன்னும் விரைவு அஞ்சல் இன்று துவங்கப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback