மார்ச் 17 1845
எலாஸ்டிக் தன்மையுடைய ரப்பர் பாண்டுகள் செய்வதற்கு இன்று ஸ்டீபன் பெரி என்பவருக்கு காப்புரிமம் வழங்கப்பட்டது. இதே நாளில் அவர் உற்பத்தியையும் துவக்கி விட்டார்.
மார்ச் 17 1920
பங்களாதேஷ் நாட்டின் தந்தை என அறியப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் பிறந்த நாள்.
பாகிஸ்தான் பிரிவதற்கு முன் கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர் இவர். அவாமி லீக் என்ற கட்சியின் தலைவராஇருந்தார். பங்களாதேஷ் உருவான பிறகு முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது பிரதமராக இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குடும்பத்தில் உயிர்தப்பிய இவருடைய மகள் சேக் ஹசீனா பங்களாதேஷ் பிரதமராக இருந்தவர். தற்போதைய பங்களாதேஷ் கலவரங்களுக்குப் பின் ஷேக் ஹசீனா இந்தியாவில் ஒரு பாதுகாப்பான பகுதியில் தங்கியுள்ளார்.
மார்ச் 17 1935
திரைப்பட நடிகர் மேஜர் சுந்தரராஜன் பிறந்த நாள்.
மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில் இவரது நடிப்பு பெரும்பாரட்டைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சுந்தர்ராஜன் என்ற இவரது பெயரோடு மேஜர் சேர்ந்துவிட்டது. பின்னாளில் அந்த நாடகம் மேஜர் சந்திரகாந்த் என்ற அதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதிலும் இவரே நடித்திருந்தார்.
திரைப்படங்களில் இவர் பேசும் வசனங்களில் இவரது உச்சரிப்பு தெளிவாக இருக்கும். அதனாலேயே படிப்பறிவில்லாதவர்களும் கூட இவருடைய வசனத்தை மனப்பாடமாகச் சொல்வார்கள்.
மார்ச் 17 1962
கல்பனா சாவ்லா இன்று ஹரியானா மாநிலம் கர்னூலில் பிறந்தார்.
Comments
Post a Comment
Your feedback