மார்ச் 10, 1876
அலெக்சாண்டர் கிரகாம்பெல் தான் கண்டுபிடித்த தொலைபேசி மூலம் முதன் முதலாக தன் உதவியாளருடன் பேசிய நாள் இன்று. அவர் பேசிய பேச்சு "வாட்சன் இங்கு வா" என்பது.
மார்ச் 10, 1897
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படும் சாவித்திரிபாய் புலே மறைந்த தினம்.
தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, பெண்களுக்கான பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்தியாவில் பெண்களுக்கு என்று தொடங்கப்பட்ட முதல் பள்ளி அது தான்.
மார்ச் 10, 1903
ஜெமினி எஸ்.எஸ்.வாசன் இன்று தான் பிறந்தார்.
இவரது முழுப் பெயர் டி.எஸ்.சீனிவாசன்.
பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். வறுமையின் காரணமாக படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார். பூதூர் வைத்தியநாத ஐயரால் ஆரம்பிக்கப்பட்டு நடத்த முடியாமல் நின்றுபோன ஆனந்த விகடன் பத்திரிக்கையை 200 ரூபாய் விலை கொடுத்து வாங்கி சொந்தமாக ஆனந்த விகடன் அச்சகத்தைத் துவக்கினார்.
தமிழகத்தின் புகழ்மிக்க எழுத்தாளர்களான கல்கி போன்றோரைக் கொண்டு 1929 முதல் ஆனந்த விகடன் இதழை நன்கு நடத்தினார். 1941இல் ஜெமினி ஸ்டுடியோவையும் ஜெமினி பட தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்து திரைப்படத்துறையில் பல மாறுதல்களை உருவாக்கினார்.
சந்திரலேகா (1948 திரைப்படம்)
ஆனந்த விகடன் நிறுவனம் இன்று பல இதழ்களை வெளியிட்டு நடத்தி வருகிறது.
இந்த பத்திரிகை மேதை தஞ்சை திருத்துறைப்பூண்டியில் இன்று தான் பிறந்தார்.
மார்ச் 10, 1933
பாவலரேறு என்று அழைக்கப்பட்ட பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்.
சனிக் கோளைச்சுற்றி வளையங்கள் இருப்பது போல யுரேனஸ் கோளைச் சுற்றியும் வளையங்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவலூரில் அமைக்கப்பட்ட 40 அங்குல தொலைநோக்கி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது.
மார்ச் 10, 1979
கவிஞரும் நாடக ஆசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.டி.சுந்தரம் இன்று காலமானார்.
நம் நாட்டின் மீது சீனப் படையெடுப்பின்போது "சிங்க நாதம் கேட்குது சீன நாகம் ஓடுது" என்ற வீர முழக்கம் செய்தவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback